பக்கம்:முல்லை மணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வீசுகிறது.

மிகவும் இனிய பொருள்களுக்கு ஓர் அட்டவணை கொடுங்கள் என்று சொன்னல் மைக்கு உணவுப் பண்டங் களே கினேவுக்கு வரும். நாக்குச் சுவையன்றி வேறு சுவை நமக்குத் தெரிவதில்லை. கவிஞர்களுக்கோ, உலகம் முழு வதும் இனிய பொருள்கள் கிரம்பியிருக்கின்றன. வீணே யின் ஒலி இனியது. மாலை நேரத்தில் திங்கள் வீசும் வெண்ணிலா இனிமைப் பிழம்பு. அப்போது வீசும் தென்றல், இனிமையினும் இனிமை. இளவேனிற் காலமோ, இயற்கை மகளின் எழிலே எடுத்துக்காட்டும் பருவம். மலர் மலர்ந்த தண்ணிய பொய்கை இன்பமய மானது. இந்த இனிய பொருள்களேயெல்லாம் ஒரு சேர வைத்துப் பாடுகிருர் அப்பர். இறைவனுடைய இணையடி நீழல் இந்தப் பொருள்களைப் போல இனித்திருக்குமாம்.

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணே யடி நீழலே - . என்று இறைவனது இணையடி நீழலுக்குப் பல இனிய பொருள்களே உவமை கூறுகிருர் அப்பர்.

அப்பர் சுவாமிகள் கூறும் ஐந்து பொருள்களில் ஒன்று தென்றல். இளவேனிற் காலத்தில் தென்திசையி லிருந்து வீசும் அதற்கு, மந்தமாருதம் என்று வடமொழி யில் பெயர் அமைந்திருக்கிறது. தெற்கிலிருந்து வருவதால் 'தென்றல்' என்ற பெயர். தமிழில் வந்தது. இப்படியே வடக்கிலிருந்து வீசும் காற்றுக்கு 'வாடை என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/50&oldid=619663" இலிருந்து மீள்விக்கப்பட்டது