பக்கம்:முல்லை மணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வீசுகிறது 45

மேற்கிலிருந்து வீசுவதற்குக் கோடை என்றும், கீழ் காற்றுக்குக் கொண்டல்' என்றும் தனித் தனியே பெயர் உண்டு. - . -

தமிழ்நாடு பாரத நாட்டின் தெற்குப் பகுதியில் இருக் கிறது. இதற்குத் தென்பகுதியில் பாண்டி நாடு உள்ளது. அதில் உள்ளது பொதியில் மலை. அந்தப் பொதியிலிலிருந்து பிறந்து வருவது தென்றல் என்று கூறுவது புலவர் மரபு. அதனால் அதற்கு மலய மாருதம் என்று பெயர் வந்தது. பொதியிலுக்குத் தென்றல் வெற்பு’ என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது.

ஆவியந் தென்றல் வெற்பு என்று ஒரு புலவர் பொதியிலேக் குறிக்கிரு.ர். r

தென்றலைப் புலவர்கள் பலவகையாக வருணித்திருக் கிருர்கள். பொதியிலில் உள்ள சந்தன மரங்களோடும் அருவிப் புனலோடும் தோழமை கொண்டு வீசுவது அது. மன்மதனுக்கு அது தேராக இருப்பது. காதலர்களின் உள்ளத்தே காமப் பயிரை விளைவிக்கத் தென்றல் உதவு கிறது. காவியங்களிலும் தனிப் பாடல்களிலும் தென்றலின் பெருமையைப் பலபடியாகக் காணலாம். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் தென்றல் விடு தூது’ என்று ஒரு பிரபந்தம் பாடிருக்கிரு.ர். .

女 இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில் தென்றலப் பல இடங்களில் தவழவிடுகிரு.ர். கோவலனும் கண்ணகி யும் திருமணம் செய்துகொண்டு தனியே ஏழடுக்கு மாளிகை ஒன்றில் வாழ்கிருர்கள். அப்போது தென்றல் வந்து இன் புறுத்துகிறதாம். அதைப் பாடுகிருர் எழுகில மாட மாகிய அந்த மாளிகையில், இடைகிலமாகிய நான்காவது மாடியில் இருந்தபோது தென்றல் வீசுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/51&oldid=619664" இலிருந்து மீள்விக்கப்பட்டது