பக்கம்:முல்லை மணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முல்லே மணம்

அது பல மலர்களின் மணத்தை அளேந்து வருகிறது. செங்கழுநீர் மலரை மெல்லத் தடவுகிறது. அப்பால் செள் வாம்பல் மலரைத் தழுவுகிறது. பிறகு குவளேயுடன் இரக சியம் பேசுகிறது. வயல்களில் தன் இதழ்களே விரித்துக் கொண்டு தாமரை மலர்ந்திருக்கிறது. அதில் வண்டுகள் ஒலிக்கின்றன. தென்றல் அதனிடம் சென்று அளேகிறது. அங்கங்கே உள்ள மணத்தைப் பூசிக்கொண்டு வரும்போது, அதற்கு ஒரு தோழன் கிடைக்கிருன். அந்தத் தோழனும் தென்றலைப் போலவே மலர்களின் மணத்தை நுகர்ந்து தாதை அளேந்து திரிகிருன் வண்டுதான் அந்தத் தோழன். ஊர் ஊராகச் சுற்றும் பிரயாணிகள், ஒருவரை ஒருவர் கண்டால் தங்கள் தங்கள் அநுபவங்களைக் கூறிக்கொள் வார்கள். பிறகு ஒன்ருகவே செல்லுவதும் உண்டு. இங்கே தென்றல் தன் அநுபவத்தை வண்டோடு சொல்லியது. -

கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளே அரும்புபொதி அவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை வயற்பூ வாசம் அளே.இ

வந்த தன் பெருமையை அது பேசுகிறது.

(முழு நெறி இதழ் ஒடிக்காத பூ பொதி கட்டு சுரும்பு. வண்டு; அளேஇ கலந்து.) -

வண்டு எந்த எந்த மனத்தை நுகர்ந்து வருகிறது தெரியுமா? தென்றல் வயல்பக்கமாக வந்தது. வண்டு கடற் கரைப் பக்கமாக வந்து, பூம்பொழிலினுாடே புகுந்து வரு கிறது. கடற்கரையில் தாழை தன் வெண்மையான மலரை விரித்துக்கொண்டு நிற்கிறது. அதனிடம் சிறிது தங்கி விட்டு, அடுத்தபடி உள்ள பொழிலில் மாலையைப் போலப் பூக்கும் மாதவி மரத்தில் ஊதிவிட்டுச் சண்பக மரத்துக்குப் போயிற்று. அதில் உள்ள தாதைத் தேர்ந்து உண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/52&oldid=619665" இலிருந்து மீள்விக்கப்பட்டது