பக்கம்:முல்லை மணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வீசுகிறது 莎盒

முல்லை என்ன-இவற்றைப் பறித்து மாலே கட்டி அணிங் திருக்கிருர்கள் மக்கள். அந்த மாலைகளேயே அணையாகக் கொண்டு சிறிதே இகளப்பாறிவிட்டுத் தென்றல் வருகிற தாம். o,

ஆங்குத் தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை மனேவளர் முல்லைப் போதுவிரி தொடையற் பூஅணே பொருந்தி மதுரைத் தென்றல் வந்தது காணtர்! (கோதை - மாலே, மாதவி - குருக்கத்தி, அணே - மெத்தை.) அவர்கள் இதோடு கிறுத்தவில்லை. அந்தத் தென்றலில் உள்ள மனத்தைக் கொண்டே மதுரைமா ககரத்திலுள்ள வளங்கள் எல்லாவற்றையுமே சொல்லிவிடுவார்கள் போல் இருக்கிறது!

'இப்போது பாருங்கள்: அவரவர் வீடுகளில் சமையல் செய்கிருர்கள். அந்த அட்டிற் புகையின் மணம் இது. அகன்ற அங்காடி வீதியில் அப்பம் சுட்டு விற்கிறவர்கள் இருக்கிருர்கள். அந்தப் புகை இது. ஆடவரும் மகளிரும் கூந்தலே உலர்த்த கறும்புகை புகைக்கிருர்கள். அந்தப் புகையின் மணம் இது. இதை கன்ருகப் பாருங்கள். அங்கே நடைபெறும் வேள்வியில் ஆகுதி கொடுக்கிருர்கள். அந்தப் புகை மணக்கிறது. இப்படிப் புகைகளின் மணத்தை ஆராய்ந்தால் பல வகைகளைக் காணலாம்."

அட்டில் புகையும் அகல் அங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் பல்வேறு பூம்புகை அளே.இ மதுரைத் தென்றல் வந்தது காணிர்!’ (அட்டில் சமையலறை, கூவியர் - அப்பம் விற்போர்.)

1. சிலப். 18 : 1.19-32. 2. бар. 13:122—32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/57&oldid=619670" இலிருந்து மீள்விக்கப்பட்டது