பக்கம்:முல்லை மணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முல்லே மணம்

"இவை நகரத்திலுள்ள பல இடங்களிலிருந்து வருவன. பாண்டியனது அரண்மனையிலிருந்து வரும் மன வகைகளுக்குக் கணக்கே இல்லை. எத்தனையோ விதமான கலவை ஈறும்பொருள்கள் அங்கே இறைபடுகின்றன. அந்த மணத்தை நுகர்ந்தால் அப்புறம் வேறு வேலேயே செய்யத் தோன்ருது. உயிரைப் பிணித்து மயங்கச் செய்பவை அவை, "இப்படி அழகிய சந்தனக் குழம்பு முதலியவற்றின் மணத்தையும், மலர்களின் மனத்தை யும், புகைகளின் மணத்தையும், அரண்மனையிலுள்ள நறுமணத்தையும் அளாவி, புலவர் காவிலே புகழ் பெறும் மதுரைத் தென்றல் வந்தது. அதல்ை மதுரை அருகில் இருக்கிறதென்று தெரியவில்லையா?” என்று கேட்கிருர்கள்.

--- - - - வெல்போர்

விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்

அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்

கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்

புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற்

பொதியில் தென்றல் போலா தீங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணிர் !

கோயில் - அரண்மனை. கிவப்பு - உயர்வு.

இங்கே தென்றல் மதுரை வளத்தையே ஒருவாறு தெரிவிக்கும் தூதனக உதவுகிறது.

ஒரு புலவர் தென்றலின் நடைக்கு உவமானம் சொல் கிருர். மெல்ல வீசுவதால் அதற்கு மென்கால் என்றும் மந்தமாருதம் என்றும் பெயர் வந்தன. அதன் மெத்தென்ற கடைக்கு ஏற்ற உவமையை அழகாகச் சொல்கிருர் புலவர். ஒரு பெண்ணின் கடையைப்போல அது மெத்தென்ற நடை

1. சிலப். 18:26-32 . . .-سس۔--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/58&oldid=619671" இலிருந்து மீள்விக்கப்பட்டது