பக்கம்:முல்லை மணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வீசுகிறது 53

யிட்டு மெல்ல அசைந்து வருகிறதாம். அந்தப் பெண். எத்தகையவள் ?

அவள் மங்கல மங்கை சுமங்கலி; ஆணழகன் ஒருவ அணுக்கு ஏற்ற அழகு; காதலி. வளவாழ்வு கிரம்பிய அரச குலத்தில் வந்த பெண். அவள் இன்ருக வாழ்ந்து இப்போது கருவுற்றிருக்கிருள். மாசமோ கிறைந்துவிட்டது. அவள் உடம்பு முழுவதும் ஆபரணங்கள். அவள் கடந்து வரு கிமுள். மெல்ல மெல்ல அடியை எடுத்து வைத்து வரு கிருள். அவளேப்போல இந்தத் தென்றல் அசைகிறதாம். ‘அத்தகைய தென்றல் வீசும் செந்தமிழ் காட்டையுடைய பாண்டியனே !' என்று புலவர் பாடுகிருர்,

மங்கல மங்கையராய்

மன்னவர் கன்னியராய் மைந்தர் வயிற்றினராய்

வாழ்வின ராய் அதிலே திங்கள் நிறைந்துவரும் - சேயிழை யார்நடைபோல் தென்றல் அசைந்துவரும் - செந்தமிழ் நாடுடையாய் ! தென்றல் மந்த மந்த மணந்து வரும் மென்னடைக்கு இதைவிடச் சிறந்த உவமையைச் சொல்ல இயலுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/59&oldid=619672" இலிருந்து மீள்விக்கப்பட்டது