பக்கம்:முல்லை மணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரைத் துனது 59。

மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ பன்னருந் தவம்புரி பருவம் ஈதுஎனக் கன்னமூ லத்திலே கழற வந்தென மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர் மயிர். (கன்னமூலம் - காதின் அடி, கழற வந்தென - சொல்ல வங் தது போல.)

அந்த நரைமயிர் வேறு ஒரு விதமாகவும் காட்சி அளித்தது. நீங்கு செய்து உழலுகின்ற இராவணனுடைய பாவம் ஒரு கரை மயிராகத் தோன்றியதோ என்று எண் னும்படி இருந்ததாம்.

தீங்குழல் இராவணன் செய்த பாவந்தான் ஆங்கொரு நரையதாய் அணுகிற் ருமெனப் பாங்கில்வந் திடுநரை படிமக் கண்ணடி ஆங்கெதிர் கண்டனன் அவனி காவலன்.' (தீங்கு உழல்; படிமக் கண்ணுடி உருவம் முழுவதையும் காட்டும் கிலேக் கண்ணுடி, அவனி காவலன் - தசரத மன்னன்.)

அதைக் கண்ட பிறகே தசரதன் தான் தவம் செய்ய எண்ணி, இராமனுக்கு முடிசூட்ட நிச்சயிக்கிருன். கைகேயி இடைப் புகுந்து அவனே வனத்துக்கு ஒட்டுகிருள். அங்கே இராவணன் சீதையை எடுத்துச் செல்லுகிருன். அதல்ை இராமன் அவனேப் போரில் அழிக்கிருன். இவ் வளவுக்கும் மூலம் தசரதன் இராமனுக்கு முடி குட்ட எண்ணியது. அந்த எண்ணத்துக்கு இந்த கரைக் காட்சி காரணமாயிற்று.

வாழ்க்கையில் எத்தனே துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும் உண்மையை மறந்து -வாழ்க்கை கிலேயாமையை மறந்து - கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்ந்தவர்களும் அறிந்துகொள்ளும்படி இயற்கையிலே

1. இந்த இரண்டு பாடல்களும் சில கம்பராமாயணச் சுவடி களில் மாத்திரம் காணப்படுபவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/65&oldid=619678" இலிருந்து மீள்விக்கப்பட்டது