பக்கம்:முல்லை மணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முல்லை மணம்

கண்களையுடைய பெண்களின் ஆசை நீங்கவும், நாம் விரும்பும் இடத்துக்கு நமக்குக் கண்போல இருந்து கைக் கோல் வழிகாட்டவும், உயிரைக்ேகும் கூற்றுவன் அருகிலே வந்து நிற்கவும், காற்பது பிராயம் கடந்து விட்டோம்; கரைத் தூது வந்துவிட்டது. இனி இளமை கில்லாது. ஆசையைத் துறந்து தவத்தை மேற்கொள்வதே துணிவு' என்று உறுதி பூணுகிருர்களாம்.

வேற்கண் மடவார் விழைவொழிய, யாம்விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதா, நாற்ப திகந்தாம் ; நரைத்துாது வந்ததினி நீத்தல் துணிவாம் ; நிலையா திளமையே. (மடவார்-பெண்கள்; கோற்கண்-கோலாகிய கண், நெறி. வழி, உழையதா அருகில் இருப்பதாக இகந்தாம் - கடந்துவிட் டோம்; நீத்தல் ஆசையைத் துறத்தல்.)

தசரதன் ஒருநாள் கண்ணுடியில் பார்த்துக் கொண் டாளும். அவன் காதடியில் ஒரு சிறு கரைமயிர் காட்சி அளித்ததாம். உடனே அவனுக்குத் தூக்கி வாரிப் போட் டது. அறுபதியிைரம் ஆண்டுகளாக அவன் ஊக்கம் சிறிதும் குறைவில்லாமல் அரசாண்டு வந்தான். இப்போது அந்த கரை மயிர் அவன் காதடியிலிருந்து காதோடு காதாக ஏதோ இரகசியத்தைச் சொல்லியது.

"தசரத மன்னனே, உனக்கு வயசாகிவிட்டது. இனி உயிர்க்கு உறுதி பயக்கும் வேலையில் நீ ஈடுபடவேண்டும். உலகத்தை உன் மகளுகிய இராமனுக்கு அளித்துவிட்டுச் சொல்வதற்கு அரிய தவத்தை நீ புரிவதற்கு ஏற்ற பருவம் இது” என்று காதடியிலே சொல்வதற்காகத் துரது வந்தது போல, மின்னலேப் போலக் கருமை நீங்கி வெளுத்து கின்றது ஒரு மயிர். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/64&oldid=619677" இலிருந்து மீள்விக்கப்பட்டது