பக்கம்:முல்லை மணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

€2 முல்லை மணம்

மன்னுடை மன்றத்து ஒலத் தூக்கினும் என்று வரும் குத்திரத்தில் ஒலத் தூக்கு என்னும் தொடர் வருகிறது.

ஒருவர் ஒரு நிலத்தை மற்ருெருவருக்கு விற்ருலும், கடன் வாங்கிலுைம், வேறு ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அவற்றையும் ஒலேகளிலே எழுதி வந்தார் கள். அவ்வோலேகளுக்கு ஆவண ஒலே என்று பெயர். ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய ஆவணங்களே அவ்வூர்ச் சபையினர் ஒரிடத்தில் பாதுகாத்து வந்தனர். இக்காலத் தில் பத்திரங்களைப் பதிவு செய்யும் கிலேயங்கள் அரசியலா ருடைய ஆட்சியில் இருக்கின்றன அல்லவா ? அவற்றைப் போல ஆவண ஒலைகளைக் காப்பில் வைத்து, வேண்டும் போது நோக்கும் வகையில் தருவதற்காகத் தனி இடம் இருந்தது. அதற்கு ஆவணக்களரி என்று பெயர்.

ஆவணக் களரியே காப்பிட்டுக் கைச் செலவறக் கொண்டு விற்று ' என்று திருப்புகலூரில் உள்ள கல் வெட்டு ஒன்றில் ஒரு செய்தி வருகிறது. ஆவண ஒலே எழுதிய பிறகு அதனே ஆவணக்களரியில் வைத்துக் காப்புச் செய்ததை அது குறிக்கிறது.

திருமுகமானலும் ஆவணமானலும் ஒலேயை அப்ப டியே நீளமாக வைக்காமல் சுருட்டி அதன்மேல் முத்திரை யிடுவது வழக்கம். இவ்வாறு சுருட்டுவதனால்தான் திரு முகத்துக்கு முடங்கல் என்ற பெயர் வந்தது.

சுந்தரமூர்த்தி நாயனர் வரலாற்றில் ஆவண ஒலையைப் பற்றிய செய்தி வருகிறது. முதியவராக எழுந்தருளி நாய ைைரத் தம் அடிமை என்று உரிமை கொண்டாடிய வெண் ணெய்கல்லூர்ப் பித்தர் தம் உரிமைக்கு ஆதாரமாக ஒர்

ஒலையைக் காட்டினர். • -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/68&oldid=619681" இலிருந்து மீள்விக்கப்பட்டது