பக்கம்:முல்லை மணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவண ஒலே 63

அக்காலமுன் தந்தைதன் தந்தை ஆள் ஒலே ஈதால் என்று காட்டினர். அதைச் சுந்தரர் வலிதிற்பற்றிக் கிழித்து எறிந்துவிட்டார். உடனே முதிய அந்தணர், " இது படி ஒலேதான்; இதற்கு மூல ஒலேயும் என்னிடம் இருக்கிறது. அதைச் சபையோர்முன் காட்டி அடிமை என்பதைச் சாதிப்பேன் ' என்று கூறித் திருவெண்ணெய் கல்லூரில் இருந்த சபைக்கு அவரை அழைத்துச் சென்ருர்: அந்தச் சபையோர்முன் தம் வழக்கை எடுத்துரைத்தார். சபையினர், " நீர் இவரை அடிமை என்று சொல்வ தற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? ஆட்சி உண்டா? அல்லது ஆவண ஒலே இருக்கிறதா? அன்றி இதை வேறு யாரேனும் அறிவதற்குச் சாட்சி உண்டா?” என்று கேட்டனர். அப்போது, "இதோ ஆவண ஒலே இருக்கிறது” என்று முதியவர் கூறினர். -

அவையினர் அதனைக் கண்டனர். பின்பு அவர்களு டைய ஏவலின்படி ஊர்க்கரணத்தான் அந்த ஒலேயைத் தொழுது வாங்கிச் சுருட்டி இருந்த அதன் மடிப்பை நீக்கிப் பார்த்து, அது பழமையான ஒலேயே என்று தெளிந்து அதை வாசிக்கலானன். .

இருள்மறை மிடற்ருேன் கையில்

ஒலேகண் டவையோர் ஏவ அருள் பெறு கரணத் தானும்

ஆவணம் தொழுது வாங்கிச் சுருள்பெறு மடியை நீக்கி

விரித்தனன், தொன்மை நோக்கித் தெருள்பெறு சபையோர் கேட்ப . வாசகம் செப்பு கின்ருன் என்று இச்செய்தியைச் சேக்கிழார் பாடுகிருர் ஆவண ஒல சுருட்டி யிருந்ததென்பதை இச்செய்யுள் தெரிவிக்கிறது. 1. பெரியபுராணம், தடுத்தாட்கொண்ட, 58. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/69&oldid=619682" இலிருந்து மீள்விக்கப்பட்டது