பக்கம்:முல்லை மணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఆల్డ్కికu63r ఫ్టడీ) 65

ஆவணக் களரியே காப்பிட்டு' என்ற கல்வெட்டு வாசகத் தால் இதனை உணரலாம்.

ஒலைகளைச் சுருளாக்கி அதன்மேற் பொறியிட்டு, శివా! னக் களரியில் பாதுகாத்தார்கள். அப்படி அப்படியே வைத்து விட்டால் பாதுகாப்பு ஆகாது. அவற்றைக் குடத் துக்குள் இட்டு, குடத்தின் வாயை மூடி இலச்சினேயிட்டு வைத்தார்கள். -

ஊர்ச் சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது குட வோலே இடுதல் என்னும் முறை இருந்து வந்தது. இதனை உத்தரமேரூர் என்ற ஊரிலுள்ள கல்வெட்டு மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஊரில் உள்ள பல்வேறு வாரியங்களுக்குரியவர்களைத் தெரிந்தெடுக்கக் குடவோலே முறையையே ஆண்டார்கள். குறிப்பிட்ட வாரியத்துக்குத் தகுதி உள்ளார் பெயர்களைத் தனித்தனியே ஒலைகளில் எழுதி ஒரு குடத்தில் போட்டுக் குலுக்கி இளம் பிள்ளே ஒருவனேக் கொண்டு ஒவ்வொன்ருக எடுக்கச் சொல்வார் கள். எத்தனை பேர் வேண்டுமோ அவ்வளவு ஒலே நறுக்கு களே எடுக்கச் சொல்வார்களாம்' குடத்தில் இட்டு எடுப் பதல்ை குடவோலே என்ற பெயர் வந்தது.

தேர்தல் சமயத்தில் குடத்தில் ஒலையிட்டு எடுப்பதோடு ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும் குடத்தைப் பயன் படுத்தினர்கள் என்றே தெரியவருகிறது. இலச்சினையிட்ட ஒலச் சுருள்களைக் குடத்தில் இட்டு அதனை மூடிக் காப் பிட்டு ஆவணக் களரியில் பாதுகாத்து வந்தார்கள்.

- - 女 கல்வெட்டுகளில் காணும் செய்திகளாலும் பெரிய புராணத்தாலும், ஆவணம், ஆவணக் களரி என்பவற்றைப் பற்றிய செய்திகள் தெரிய வருவதோடு சங்க காலத்துச் 1. The Colas by K.A. Nilakanta Sastry, pp.284, 297. - تأسسجة ، مره .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/71&oldid=619684" இலிருந்து மீள்விக்கப்பட்டது