பக்கம்:முல்லை மணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முல்லை மணம்

செஞ்செவி எருவை அஞ்சுவர இகுக்கும் கல்லதர்க் கவலே.' என்பது கழுகுகள் பிணங்களின் குடலேப் பிடுங்கும் செய்தி யைச் சொல்லும் பகுதி.

கழுகுகளின் செயலுக்குப் புலவர் ஓர் உவமையைச் சொல்கிரு.ர். -

கயிறுபிணிக் குழிசி ஒலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண ம்ாக்களின்." கயிற்றினலே கட்டுதலே உடைய குடத்தில் உள்ள ஒலே யைக் கைக்கொண்டவராகி அதில் உள்ள இலச்சினையை ஒப்பு நோக்கி அழித்துப் பார்க்கும் ஆவணக் களரியில் உள்ளவர்களைப் போல’ என்பது இப்பகுதியின் பொருள். கழுகுகளுக்கு ஆவண மாக்களும், உடம்புக்குக் குடமும், குடலுக்கு ஆவண ஒலயும் உவமைகள். -

பழைய உரையாசிரியர் இங்கே, குழிசி-குடம், பொறி -இலச்சினை, ஆவண மாக்களின்-பிரமாணம் வாங்குகிற மாக்களேப் போல' என்று எழுதுகிருர். பிரமாணம் என்ற சொல்லுக்குச் சத்தியம் என்ற பொருள் இப்போது வழங்குகிறது. அதற்குச் சரியான பொருள் ஆதாரம், சான்று, அளவை என்பன. காட்சிப் பிரமாணம், அது மானப் பிரமாணம் என்ற வழக்கினல் இதனை உணரலாம். ஒரு செய்திக்கு ஆதாரம் தேடி, குடத்தில் சேமித்து வைக் கப் பெற்ற ஆவணங்களே எடுத்து, அவற்றின் மேலுள்ள அடையாள முத்திரைகளை நீக்கிப் பிரித்துப் பார்க்கும் கரணத்தானைப் போன்றவர்களேயே புலவர் கினைத்திருக்க

1. உயிர்கிறம் பெயர உயிர் தன் தன்மையினின்றும் மாறிச் செல்ல; அமர்க் கடந்த போரை வென்ற; தரீஇ வாங்கி; தெறுவர. சுழல; எருவை - கழுகு இகுக்கும் போடும்; கல் அதர்க்கவலே - கல்லே உடைய கவர்த்த வழி.

2. பிணி-கட்டு, குழிசி - குடம், பொறி - அடையாளம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/74&oldid=619687" இலிருந்து மீள்விக்கப்பட்டது