பக்கம்:முல்லை மணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரிலும் அறம்

நாகரிகம் முதிர முதிர மனிதனுக்கு அறிவு பெருகு கிறது. ஆனல் அன்பு பெருகுகிறது என்று சொல்ல இய லாது. ஊனுணவு கொள்ளும் காட்டு விலங்குகள் கூடி வாழ் வதில்லை. ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு வாழ்கின்றன. இந்த விலங்குத் தன்மை மனிதனிடமும் இருக்கிறது. அவன் அறிவு விலங்குத் தன்மையைப் புதிய வகையில் பயன்படுத்திக்கொள்கிறது. பல்லாலும், நகத்தாலும் பகையை எதிர்த்துப் போரிடுவது விலங்கு. மனிதனே படைக்கலங்களால் எதிர்த்துப் பொருகிருன். அவன் அறிவு வளர வளரப் பகையுணர்ச்சி குறைவதில்லை; படைக்கலங்கள் பெருகுகின்றன. இடப்பரப்பை வெல்ல வெல்ல, அவன் செய்யும் போர் உலகப் பெரும் போராக வளர்ந்து விடுகிறது. அவனுடைய விஞ்ஞான அறிவு, அணுக்குண்டையும் நீர் வாயுக்குண்டையும் படைத்துப் பேர்ரைப் பயங்கரமாக்கிவிடுகிறது. இன்ன காலத்தில் இன்ன இடத்தில் போர் நிகழும் என்ற வரையறையையே இந்த நாகரிக காலத்துப் போர்கள் தகர்த்து விட்டன. யாருக்கும் யாருக்குமோ பகை. அதனல் போர் என்ருல் அது அவர்களோடு சிற்பதில்லை. உலக முழுவதுமே பரவு கிறது. போர் வேண்டாத மக்களையும் இன்னலுக்குள் ஆழ்த்துகிறது. இது அறிவின் அடையாளம் என்று சொல்லலாமா?

பகை யுணர்ச்சி மனிதனிடமிருந்து போகவேண்டும் என்பது லட்சியம்.உலகில் யாவரும் அந்தலட்சிய வாழ்வைக் கடைப்பிடிக்க இயலாது என்பது உண்மை. ஆனல் பகை யுடையவர்கள் லாப நஷ்டம் பெறுவது முறையர்க் இருக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/76&oldid=619689" இலிருந்து மீள்விக்கப்பட்டது