பக்கம்:முல்லை மணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரிலும் அறம் 7 f

மற்றவர்களைப் போர் இடர்ப்படச் செய்யுமானல் அது முறையாகாது. பகையைப் போக்குவதற்கு முன் பகையின் விளைவாகிய போருக்கு வரையறை இருக்கவேண்டும்.

பழங்காலத்தில் மக்கள் போர் செய்தார்கள். அரசர் கள் படைகளையும் படைக்கலங்களையும் வைத்திருந்தார் கள். ஆல்ை போர் விளைந்தால் அதற்கும் ஒரு வரையறை இருந்தது; நெறி முறை இருந்தது. யுத்த தர்மம் என்று சொன்னர்கள். அறப்போர் என்று சொல்வதற்கு ஏற்ற படி சில தடைகள் இருந்தன.

போரிலே அறம் எங்கே வந்தது? போரே அறத் துக்கு மாருயிற்றே" என்று லட்சியவாதி சொல்லலாம். நூறு தவறுகளேச் செய்பவனே எண்பது தவறுகளைச் செய்யும்படி செய்தால் அது நன்மையன்று என்று சொல்ல முடியுமா? போரே கூடாது என்ருல் நடவாத காரியம். "போர் செய்கிருயா? தொலைந்து போ: ஆணுல் அதிலும் கட்டுப்பாடாக நடந்துகொள்” என்று பாரத நாட்டுப் பெருமக்கள் அறிவுறுத்தினர்கள்.

தமிழ் நாட்டில் இந்த வரையறை இலக்கிய இலக் கணங்களில் ஏறுமளவுக்குச் சிறப்புற்றிருந்தது. போரைப் பற்றிய பாடல்களுக்கு இலக்கணம் வகுப்பது புறப் பொருள் இலக்கணம். புறப்பொருளே ஏழு பகுதியாகப் பிரித்துச் சொல்லியிருக்கிருர்கள். பன்னிரண்டாகவும் பிரிப் பதுண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

போர் கிகழ்வதற்கு முன்னுல் ஒர் அரசன் தான் போர் செய்யப்போகும் செய்தியைத் தன் காட்டு மக்களுக்கும் பகைநாட்டு மக்களுக்கும் பறையறைவித்து அறிவிப்பான். "நாங்கள் போர் செய்யப்போகிருேம். வயசானவர் கள், பெரியவர்கள், பிள்ளை பெருதவர்கள், பெண்கள், பசுக்கள் யாவரும் தங்கள் தங்களுக்குரிய பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விடட்டும்' என்று முரசறைவிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/77&oldid=619690" இலிருந்து மீள்விக்கப்பட்டது