பக்கம்:முல்லை மணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரிலும் அறம் 75。 நாளே வாவென நல்கினன், நாகிளங் கமுகின் வாளே தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

புறங்காட்டினரோடு பொருவது அறமன்று என்பதை இராமாயணத்தில் வேறு ஓரிடத்தில் குறிப்பாகக் காண் கிருேம். இராவணன் இராமனது அம்பில்ை வீழ்ந்து உயிரிழக்கிருன். பிணமாக வீழ்ந்து கிடக்கும் அரக்கனே இராமன் வந்து பார்க்கிருன். அவன் முதுகில் புண் இருக் கிறது. அதைப் பார்த்தவுடன் இராமனுக்கு வருத்தம் உண்டாகிறது. "இவன் முதுகுகாட்ட அம் முதுகின்மேல் நான் அம்பு விட்டுவிட்டேனே' என்ற ஐயம் எழவே, போயிற்று என் வீரம்' என்று புழுங்குகிருன். அப் போது விபீஷணன் உண்மையை உரைக்கிருன்.

'முன் காலத்தில் இராவணன் திக்கயங்களோடு போரிட்டபோது அவற்றின் கொம்புகள் இவன் மார்பிலே குத்தி முதுகில் வந்து புறப்பட்டன. அவற்றை அப்படியே வைத்து இழைத்துவிட்டான். அந்தச் சுவடு இது” என்று விளக்கின. பிறகே இராமன் ஆறுதல் பெறுகிருன்.

நாடுள தனேயும் ஓடி

நண்ணலர்க் காண்கி லாமல் பீடுள குன்றம் போலும்

பெருந்திசை எல்லை யானைக் கோடுள தனையும் புக்குக்

கொடும்புறத் தழுந்து புண்ணின் பாடுள தன்றித் தெவ்வர் -

படைக்கலம் பட்டென் செய்யும்’ என்று விபீஷணன் சொல்வதாகக் கம்பர் பாடுகிரு.ர்.

1. கம்ப, முதற் போர். 256. மாருதம் - காற்று; நாகு இளங் கமுகு - மிக இளைய கமுக மரம்.

2. கம்ப. இராவணன் வகை. 212. தனையும் - அளவும்: கண்ணலர் - பகைவரை; புறத்து - முதுகில், தெவ்வர். பகைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/81&oldid=619694" இலிருந்து மீள்விக்கப்பட்டது