பக்கம்:முல்லை மணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முல்லை மணம்

யும் ஒத்த படை எடாதோனேயும் பிறவும் இத் தன்மை யுடையோரையும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருத லும் முதலியனவாம்' என்று உரைக்கிருர்.

தழிஞ்சி என்பது ஒரு துறை. புறமுதுகு காட்டி ஒடும் பகைவன்மேல் படையை ஏவாமல் இருக்கும் செய்தியைச் சொல்வது அது. அதன் இலக்கணத்தை,

அழிகுறர் புறக்கொடை அயில்வாள் ஒச்சாக் கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று' என்று ஓர் இலக்கண நூல் சொல்கின்றது.

அங்கே புறமுதுகு காட்டுவோன்மேல் வாள் ஒச்சாத தைக் கழிதறுகண்மை என்று அச்சூத்திரம் கூறுகிறது. தறுகண்மை என்பது வீரம். கழிதறுகண் மை என்பது மிக்க வீரம். யாரையும் குண்டு போட்டு அழிப்பதே. வீரம் என்று எண்ணும் இருபதாவது நூற்ருண்டு நாகரிக உலகத்திற்கு இந்தக் கழிதறுகண்மை விளங்காது.

இராவணன் இராமனேடு போர் செய்து ஓய்ந்து போனன். தன் தேர், படை யாவற்றையும் இழந்து தனிய கை கிற்கிருன். அப்போது இராமன் ஓர் அம்பை விட்டு அவனேக் கொன்றிருக்கலாம். ஆனல் கிராயுதபாணியாக கிற்கும் அவனேக் கொல்வது அறமன்று. அறத்தை கிலே கிறுத்த வந்த இராமன் அறமல்லாத செயலைச் செய்யலாமா? ஆகவே அவன் அந்த அரக்கனே நோக்கி, "இன்று போய் காளே வா' என்ருன். இது தழிஞ்சி என்ற துறையின் பாற்படும். கம்பர் இந்தச் செய்தியை அழகாகச் சொல்கிரு.ர். - - -

ஆள யாவுனக் . கமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயினகண்டன; இன்றுபோய்ப் போர்க்கு 1. புறப்பொருள் வெண்பாமாலை, 55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/80&oldid=619693" இலிருந்து மீள்விக்கப்பட்டது