பக்கம்:முல்லை மணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரிலும் அறம் 73.

கெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் அரசனப் பாராட்டுகையில் இத்தகைய அறப்போரைப்பற்றிச் சொல்கிருர்:

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யிரும், பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும் எம்.அம்பு கடிவிடுதும் தும் அரண் சேர்மின்ளன அறத்தாறு நுவலும் பூட்கை மறம்' என்பது அந்தப் பகுதி. அறத்தாறு துவலும் பூட்கை மறம் என்பதற்கு, 'அறத்தின் வழியே சொல்லும் கொள்கையையுடைய போர் என்பது பொருள். போர் செய்தாலும் அதிலும் அறம் உண்டென்பதைக் குறிப்பது அது. பிறிதோரிடத்தில் போர் செய்யும் வேந்தரை, 'அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்' என்கிருர் ஒரு புலவர். -

போர் செய்யும்பொழுதும் எதிர்ப்பட்ட படை வீரர் களே மனம் போனவாறே கொல்வது அறமன்று. சிலரைக் கொல்லாது விடுவதும் உண்டு. தொல்காப்பிய உரையில் கச்சினர்க்கினியர் ஒரிடத்தில் சிறப்புடை அரசியல், சிறப் பில்லாத அரசியல் என்று இரண்டாகப் பிரித்துச் சொல்கிருர். மதில்களே அமைத்து அவற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்களே வைத்துப் பகைவர்மேல் அம்பு எய்வது போன்ற செயல்களை அதருமமான கலியுகத்தில் வந்த சிறப்பில்லாத வழிகள் என்று கூறுகிருர். பின்பு, சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத்தோனேயும் மகப் பெருதோனேயும் மயிர் குலேக்தோனேயும் அடி பிறக் கிட்டோனையும் பெண் பெயரோனையும் படையிழந்தோனே

1. புறநானுாறு, 9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/79&oldid=619692" இலிருந்து மீள்விக்கப்பட்டது