பக்கம்:முல்லை மணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடங்கிய விரல்

இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங் களும் பாரத நாட்டில் மூலே முடுக்குகளில் எல்லாம் பரவி யிருக்கின்றன. வால்மீகியின் இராமாயணத்திலும், வியாச ருடைய பாரதத்திலும் இல்லாத பல கதைகள் அங்கங்கே வழங்குகின்றன. அவற்றில் ஒன்று வருமாறு:

துரியோதனன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்தான். அவனைப் பஞ்சபாண்டவரும், கண்ணனும் பார்த்துக் கொண்டு நின்ருர்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவனுடைய வலக்கை விரல்கள் ஐந்தும் மடங்கி இருந்தன. அதனேக் கண்ட தருமபுத்திரர், "இவ்வாறு இருப்பது வியப்பாக இருக்கிறதே! இறக்கிறவர்களுக்கு ஏதேனும் மனக் குறை இருந்தால் கை விரல் மடங்கியிருக்கும் என்று சொல்வார்கள். துரியோதனனுக்கு என்ன மனக் குறையோ, தெரியவில்லையே' என்று வருத்தத்தோடு கூறினர். -

அப்போது சகாதேவன், இவனுக்கு ஐந்து குறைகள் மனத்தில் இருந்தன. தான் கினைத்தபடி அந்த ஐந்தும் நிறைவேறி யிருந்தால் தனக்கே வெற்றி கிடைத்திருக்கும் என்று இவன் எண்ணினான். அவை கிறைவேருத ஏக்கத் தால் ஐந்து விரல்களும் மடங்கியிருக்கின்றன; உயிர் போகவில்லை' என்ருன். -

உடனே தருமபுத்திரர், "அந்தக் குறைகள் யாவை?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/83&oldid=619696" இலிருந்து மீள்விக்கப்பட்டது