பக்கம்:முல்லை மணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முல்லை மணம்

சகாதேவன் சொல்லலான்ை: 'கண்ணபிரான் தூது சென்றபோது அவருக்கு விருந்தளித்ததற்காக விதுரனத் துரியோதனன் கோபித்துக்கொண்டான். அதனல், விது ரன் தன் வில்லை முறித்தெறிந்தான். அப்படிச் செய்யாமல் இருந்தால் இவனுடைய பங்கில் பலம் அதிகமாகி யிருக் கும். இது முதல் குறை” என்ருன்.

"ஆம்; அது பெரிய குறைதான். அடுத்த குறை என்ன?’ என்று கேட்டார் தருமர்.

கண்ணபிரானுடைய சூழ்ச்சியால் துரியோதனனுக்கு அசுவத்தாமனிடம் ஐயம் உண்டாயிற்று. அவனுக்குப் படைத் தலைமை நல்கவில்லை. அசுவத்தாமன் சேனதிபதி யாகியிருந்தால் துரியோதனனுக்கு வெற்றி கிடைத்திருக் கும். அப்படி கடவாதது இரண்டாவது குறை."

"அதுவும் உண்மைதான். அசுவத்தாமன் சேனபதி யாகியிருந்தால் கம்முடைய படை வலிமைக்குப் பெரிய சோதனையாகவே இருந்திருக்கும். அது பெருங் குறை என்பதில் ஐயமே இல்லை' என்ருர் தருமபுத்திரர்.

'கம்முடைய அன்னேக்குக் கொடுத்த வரத்தினல் கர்ணன் இரண்டாவது முறை காகாஸ்திரத்தை விட வில்லை. அப்படி விட்டிருந்தால் அருச்சுனன் உயிர் தப்பு வது அரிதாகியிருக்கும். இது மூன்ருவது குறை.”

தருமபுத்திரர் அருச்சுனனைக் கருணைப் பார்வையோடு பார்த்தார். அவன் தலையைக் குனிந்து கொண்டான். மேலும் சகாதேவன் சொல்லலாளுன்.

'களப்பலிக்கு முகூர்த்தம் குறித்து அராவானேயும் உடன்படச் செய்திருந்தார்கள் துரியோதனனச் சேர்ந்த வர்கள். ஆனால், கண்ணபிரான் அமாவாசைக்கு முதல் ங்ாளே குரியனேயும் சந்திரனேயும் ஒருங்கே வரச் செய்து அமாவாசையை உண்டாக்கி, அராவானுடைய உறுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/84&oldid=619697" இலிருந்து மீள்விக்கப்பட்டது