பக்கம்:முல்லை மணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடங்கிய விரல் 79

களைக் களப்பலியாகக் கொய்யச் செய்துவிட்டார். அப்படிச் செய்யாமல், முதற் பலியாக அராவான் கெளரவர்களுக்குக் கிடைத்திருந்தால் துரியோதனனுக்கு வெற்றி கிடைத் திருக்கும். அது மாறியது காலாவது குறை."

சொன்னவை யெல்லாம் சரியான குறைகளே. கடைசிக் குறை என்ன? அதையும் சொல்லிவிடு” என்று தருமர் ஆவலுடன் கேட்டார். -

'துரியோதனன் பதினெட்டாம் நாள் யுத்தத்தில் திடீரென்று ஒருவரும் அறியாமல், இந்த வாவியில் புகுந்து நீர்த் தம்பனம் செய்து, ஒரு மந்திரத்தை உருவேற்றக் தொடங்கினன். அது பலித்திருந்தால் இறந்திருந்த அத்தனே பேரையும் எழுப்பியிருப்பான். ஆனல், இடை யில் வீமன் இங்கே வந்து அவனை அறைகூவி அழைத் தான். துரியோதனன் மானம் தாங்காமல் மந்திரத்தைப் பாதியிலே விட்டுவிட்டு வந்தான். நீர்த் தம்பன மந்திரம் நிறைவேருததே ஐந்தாவது குறை" என்று சொல்லி முடித் தான் சகாதேவன். < *

தருமர் அதைக் கேட்ட பிறகு, "எல்லாம் இந்தப் பெருமானுடைய திருவருளால் நமக்குக் கிடைத்த பேறு' என்று சொல்விக் கண்ணபிரானப் பார்த்தார்.

கண்ணன் முறுவல் செய்தான். . - -

‘இவன் சொல்வுதைக் கேட்டாயா?” என்று தரும புத்திரர் கண்ணனேக் கேட்டார். --

கேட்டேன், இந்த ஐந்து குறைகள் காரணமாக

இவன் கை விரல்கள் மடங்கியிருந்தால் அவ்வாறு இருத்தல் தவறு என்று சொல்வேன்' என்ருன் கண்ணன்.

'ஏன்?" என்று தருமர் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/85&oldid=619698" இலிருந்து மீள்விக்கப்பட்டது