பக்கம்:முல்லை மணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முல்லை மணம்

'அவன் கினைத்தபடியே அந்த ஐந்து குறைகளும் இன்றி, அவை கிறைவேறியிருந்தாலும் துரியோதனன் வென்றிருக்க முடியாது. அந்த ஐந்துக்கும் மாருக ஐந்து வேறு காரியங்கள் நிகழ்ந்திருக்கும். அப்போது ஐந்து பலமும் துரியோதனனுக்குப் பயனின்றி ஒழியும்' என்ருன் கண்ணன். -

'ஐந்து நிகழ்ச்சிகளா? அவை யாவை?" என்று தரும புத்திரர் கேட்கக் கண்ணன் திருவாய் மலர்ந்தருள லானன். “விதுரன் வில் முறியாமல் இருந்திருந்தால் நீ யான யின்மேல் ஏறிப் போர் செய்வாய். உன் எதிரே விதுரனுல் கிற்க முடியாது” என்ருன் கண்ணன். இதைச் சொன்ன வுடனே துரியோதனனுடைய மடங்கிய விரல்களில் ஒன்று கிமிர்ந்துகொண்டது. அது கண்டு யாவரும் வியந்தார்கள். மேலும் கண்ணன் கூறத் தொடங்கினன். . 'இரண்டாவது, அசுவத்தாமா படைத் தலைவன் ஆகி யிருந்தால், நான் சக்ராயுதத்தை ஏந்திப் போர் செய்வேன். கர்ணன் இரண்டாம் முறை நாகாஸ்திரத்தை விட்டிருந் தால் அருச்சுனன் தன்னிடத்திலிருந்த பாசுபதாஸ்திரத்தை விட்டிருப்பான். அதை அவன் எய்ய வாய்ப்புக் கிடைக்க வில்லை.” -

எல்லோரும் கண்ணன் கூறுவதை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் மாற்றுக் கூறக் கூறத் துரியோதனன் விரல்கள் ஒவ்வொன்ருக கிமிர்ந்தன. . - " - . அராவானே அவர்கள் முதற் பலியாகத் தந்திருந்தால் வீமன் மற்றச் சமயங்களிலும் தன் கதாயுதத்தை விசி வெற்றி கொண்டிருப்பான். துரியோதனனுடைய நீர்த் தம்பனம் சிறைவேறியிருந்தால் நகுலன் வாளெடுத்துப் போர் புரிவான். அதல்ை உயிர் துறந்து மீட்டும் எழுந்தவர் கள் மாள்வார்கள்' என்று மாயன் கூறி முடிக்கவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/86&oldid=619699" இலிருந்து மீள்விக்கப்பட்டது