பக்கம்:முல்லை மணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரல் வைத்தது 89

என்று இந்த அடிகளுக்குப் பொருள் கொள்வதுதான் பொருத்தம் என்று முடிவு கட்டினேன். இப்போது நான் கண்ட பொருளைச் சொல்கிறேன்.

அற்றம் இல் தானம்-சோர்வு இல்லாத தானங்கள், எனே பல ஆயினும்-எத்தனே பல ஆலுைம், துற்று அவிழ். உண்ணும் சோற்றை (அன்னதானத்தை), ஒவ்வா - ஒப் பாகா , துணிவு-இதுவே துணிவு என்னும் ஆறு-என்பதை உணர்த்தும் முறை. பின் பகுதிக்குப் பொருள் விளங்கி விட்டது. தொகுத்து விரல் வைத்தது, இந்தக் கருத்தை விளக்கியவாருகும் என்று அப்படிச் செய்தவன் விளக்கம் கூறுவதாக இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது என்பது பின்னும் தெளிவாயிற்று.

இப்போது முன் பகுதியில் சிந்தனையைச் செலுத் தினேன். -

துற்றன வாகத் தொகுத்து விரல்வைத்த தெற்றுக்கஃ தென்னின்-இது அதன் காரணம் ! துற்றனவாக என்பதற்கு உண்டனவாக என்று பொருள். அஃது எற்றுக்கு-அது எதற்காக; விரல் வைத்த தாகிய அஃது எற்றுக்கு ? என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.

முதல் அடியில்தான் குழப்பம். பொருள் தெளிவு இல்லை. சொல்லுக்குப் பொருள் தெரிகிறது. அந்தப் பொருளுக்குரிய செயல் இன்னதென்று தெரியவில்லே.

அன்னதானத்தோடு தொடர்புடைய செயல்களை எண்ணிப் பார்த்தேன். உண்ணும்போது நாம் என்ன என்ன செய்கிருேம் என்பதை கினேவுக்குக் கொணர்ந்தேன். சிறிதே ஒளி கிடைத்தது. பிறகு தெளிவாகவே பொருள் விளங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/95&oldid=619709" இலிருந்து மீள்விக்கப்பட்டது