பக்கம்:முல்லை மணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முல்லே மணம்

ருக்க வேண்டும். தொகுத்து விரல் வைத்தது ' என்றமை யால் எல்லா விரல்களையும் சேர்த்து வைத்திருக்கவேண்டும். அப்படி ஒருவர் வைத்தபோது, "என் அப்படி வைக்கிறீர்?" என்று மற்ருெருவர் கேட்க, முன்னேயவர் அதற்கு விடை கூறி யிருக்கவேண்டும். அந்த விடையே இந்தப் பாட்டு.இவ்வாறு சற்றே ஆராய்ச்சியில் தலைப்பட்டேன்.

விடைப் பகுதியில் உள்ளம் சென்றது. " எற்றுக்கு அஃது?' என்ற கேள்விக்கு விடை ஆதலால், ' இது அதன் காரணம்' என்று அது தொடங்குகிறது. பின் இரண்டடி, விரல் வைத்த செயலுக்குக் காரணம் இன்ன தென்று புலப்படுத்த வேண்டும். பின் அடிகளே ஆழ்ந்து படித்தேன்.

அற்றமில் தானம் எனப்பல ஆயினும் துற்றவிழ் ஒவ்வாத் துணிவென்னு மாறே. 'தானம் எத்தனையோ பல ஆணுலும் இதனை அவை ஒவ்வா ; இது துணிவு என்பதை விளக்கும் வழி இது' என்று ஒருவாறு பொருள் கொண்டேன். ஒவ்வாத் துணிவு: என்று பாட்டில் இருந்தாலும், அதில் உள்ள தகர ஒற்று மிகை என்று பட்டது. ' துற்றவிழ் ஒவ்வா ; இதுதான் துணிவு' என்று பொருள் கொள்ள அந்த ஒற்று வேண் டியதில்லை.

தானங்கள் பலவற்றிலும் சிறந்தது அன்னதானம் என்பது யாவருக்கும் தெரியும். இந்தப் பாடல் அன்ன தானத்தின் பெருமையை உறுதியாகச் சொல்ல வந்தது என்று கருதினேன்.

துற்று என்ருல் உணவு என்று பொருள் ; அவிழ் - சோறு. துற்றவிழ் என்பது பிற உணவுகளை விலக்கிச் சோருக இடும் உணவைக் குறிக்கிறது. தானம் எத்தனே ஆலுைம் சோறு போடும் அன்னதானத்துக்கு ஒவ்வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/94&oldid=619708" இலிருந்து மீள்விக்கப்பட்டது