பக்கம்:முல்லை மணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரல் வைத்தது. 87

அங்கே, "துற்றுளவாகத் தொகுத்து விரல் வைத்த" என்று முதலடியில் பாட பேதம் இருந்தது. அடியில் துற்றன, துற்றள' என்ற வேறு பாடங்களைத் திரு வையா புரிப் பிள்ளையவர்கள் காட்டி யிருக்கிரு.ர்.

'தானம் என்ற அதிகாரத்தில் இந்தப் பாட்டை அமைத்திருப்பதால், இது ஏதோ தான சம்பந்தமாகச் சொல்வது என்று தெரிந்துகொண்டேன்.

பெருக்தொகையின் இறுதியில் அதன் பதிப்பாசிரியர் குறிப்புரை ஒன்றை எழுதி யிருக்கிருர், அதில் இந்தப் பாட்டுக்குரிய குறிப்பைப் பார்த்தேன். அங்கே, "துற்றன வாக - அநுபவித்தவை போல ; விரல் வைத்தது - எண் ணிக் கணக்கிட்டது ; தானங்கள் எவ்வளவும், ஒரவிழுக்கு ஈடாகா என்பது, அவ்வுலோபர் துணிவு என்பது கருத்து' என்ற குறிப்புரையைக் கண்டேன்.

இந்தப் பாடல், உலோபர்கள் கூறும் கூற்ருக அமைக் தது என்று பதிப்பாசிரியர் எண்ணி யிருக்கவேண்டும், அவர்கள் ஒவ்வொன்ருக எண்ணி வந்து, இதுதான் துணிவு என்று சொன்னதாக அப்புலவர் கொண்டனர் போலும்.

அந்தக் குறிப்புரையும் எனக்குத் தெளிவை உண் டாக்கவில்லை. மறுபடியும் பாடலைத் திருப்பிப் படித் தேன். இந்தப் பாட்டில் முதலில் ஒரு வின இருக்கிறது : பின் அதற்கு விடை இருக்கிறது. அந்த வின, ஏதோ ஒரு செயலுக்குக் காரணம் யாது என்று கேட்பது போல இருக்கிறது. தொகுத்து விரல் வைத்தது எற்றுக்கு” என்ற வின இந்தப் பாட்டில் இருக்கிறது. விரல் வைத்தது என்பதற்கு விரல்விட்டு எண்ணுவது என்று நீ ஐயங்கார் அவர்கள் உரை கொண்டார். விரல் விடுவது என்ருல் எண்ணுதல் என்று சொல்லலாம். விரல் வைத்தது என்று பாட்டில் இருக்கிறது. ஏதோ ஓரிடத்தில் விரலை வைத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/93&oldid=619707" இலிருந்து மீள்விக்கப்பட்டது