பக்கம்:முல்லை மணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முல்லே மணம்

அற்றமி ருன மெனப்பல வாயினுந் துற்றவி ழொவ்வாத் துணிவென்னு மாறே.

இதுதான் அந்தப் பாட்டு. மூன்ருவது அடியில் அற்றமில் தானம்' என்ற தொடர் வருவதல்ை இது தானத்தைப் பற்றியது என்று அறிய முடியும்.

பாட்டின் பொருள் தெளிவாக விளங்கவில்லை. இந்தப் பாட்டை எவ்விடத்திலிருந்து பதிப்பாசிரியர் எடுத்தார்? என்ற எண்ணம் வந்தது. பழைய உரைகளில் மேற்கோளாக வரும் பாடல்களையும், சிலாசாசனப் பாடல்களேயும், தனிப் பாடல் திரட்டில் உள்ள பாடல்களையும், ஏட்டுச் சுவடி களில் விடுதியாகக் கண்ட பாடல்களேயும், இவைபோன்ற வேறு பல பாடல்களையும் பதிப்பாசிரியர் தொகுத்துப் பதிப் பித்திருக்கிரு.ர். அடிக்குறிப்பில் இன்ன பாடல் இன்ன இடத்தில் இருப்பது என்ற செய்தியைக் குறித்திருக்கிரு.ர். ஆதலின் இந்தப் பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள அடிக்குறிப்பைப் பார்த்தேன். இது வளையாபதியில் உள்ள பாட்டென்று தெரிந்தது.

ஐம்பெரும் காப்பியங்கள் என்று வழங்கும் நூல்களில் ஒன்று வளேயாபதி. அது இப்போது கிடைக்கவில்லை. ஆயினும் அதில் உள்ள பாடல்கள் பலவற்றைப் புறத் திரட்டில் காணலாம். அடிக்குறிப்பில் வளையாபதி என்ப தோடு, புறத்திரட்டில் கண்டது என்பதையும் புலப் படுத்தி யிருக்கிருர் பதிப்பாசிரியர்.

புறத்திரட்டைப் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளே யவர்கள் மிக அழகாகப் பதிப்பித்திருக்கிருர். அதில் பாட்டு எப்படி யிருக்கிறது என்பதைப் பார்த்தேன். அறத்துப் பாலில் 28-ஆம் அதிகாரமாகிய 'தானம்' என்ப தில் இந்தப் பாட்டு இருந்தது. புறத்திரட்டில் 215-ஆவது பாட்டு இது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/92&oldid=619706" இலிருந்து மீள்விக்கப்பட்டது