பக்கம்:முல்லை மணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரல் வைத்தது

ஒரு நாள் தனிப் பாடல்களைப் படித்துக்கொண்டே இருந்தேன். பெரு நூல்களைப் படித்தால், தொடர்ந்து படித்தால்தான் சுவையை கன்கு உணரலாம். அப்படி யின்றித் தனித்தனியாக உள்ள பாடல்கள் சிறு நேரங் களில் படித்து இன்புறத் தக்கவை. ஓய்ந்த நேரத்தில் வேர்க்கடலேயைக் கொரித்துக்கொண்டிருப்பது போலத் தனிப் பாடல்களே அநுபவிக்கலாம்,

ஒரு பாட்டில் சற்றே கின்றேன். மிகவும் சுவை உள்ளதாக இருந்தாலும் மீட்டும் படித்து இன்புற வேண் டும். பொருள் தெளிவாகாமல் இருந்தாலும் ஒரு முறைக் குப் பல முறை படித்துப் படித்துப் பொருள் காணவேண் டும். அந்தப் பாட்டு இரண்டாம் வகையைச் சேர்ந்தது : எளிதிலே பொருள் புலப்படவில்லை. பாட்டு அறத்தைப் பற்றிச் சொல்வது என்பது மாத்திரம் தெரிந்தது. பதிப் பாசிரியர் பல இடங்களில் உள்ள தனிப் பாடல்களைத் தொகுத்து வகைப் படுத்தி இந்த நூலேப் பதிப்பித்திருக் கிரு.ர். பெரும் புலவராகிய திரு மு. இராகவையங்கார் அவர்கள் நெடுநாள் உழைத்துத் தொகுத்துத் தமிழருக்கு வழங்கியிருக்கும் பெருந்தொகை என்னும் நூலில்தான் அந்தப் பாட்டு இருக்கிறது. அறவியல் என்னும் பகுதி யிலே அந்தப் பாட்டை அமைத்திருக்கிருர். ஆதலின் பாட் டின் கருத்து அறத்தைப் பற்றியது என்று தெரிந்துகொள் வது எளிதாயிற்று. பாட்டைப் படித்துப் பார்த்தேன்.

துற்றன வாகத் தொகுத்து விரல்வைத்த

தெற்றுக்கஃ தென்னி னிதுவதன் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/91&oldid=619705" இலிருந்து மீள்விக்கப்பட்டது