பக்கம்:முல்லை மணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரல் வைத்தது 91

புலப்படவில்லை. 'எல்லாம் உண்ட பிறகு தொகுத்து விரல் வைத்தீர்களே, எற்றுக்கு அஃது?" என்று கேட்டான்.

'இது அதன் காரணம். தானங்கள் பல ஆலுைம், அன்னதானத்துக்கு அவை ஈடாகா என்று உறுதியாகத் தெரிவிக்கவே அப்படிச் செய்தேன்” என்று அவர் சொன்னர். -

இந்தக் காட்சி பொருத்தமாகத் தோன்றியது. பாட்டு முழுவதற்கும் இப்போது பொருள் விளங்கியது.

"துற்றன. ஆக - உணவு முழுவதும் உண்டனவாக (உண்ட பிறகு), தொகுத்து விரல் வைத்தது - விரல்களேச் சேர்த்து (சரக் கையை)க் கீழே வைத்ததாகிய, அஃது எற்றுக்கு என்னின் - அந்தச் செயல் எதற்கு என்று கேட்டாயால்ை, அற்றம் இல் தானம் - சோர்வு இல்லாத தானங்கள், எனேப் பல ஆயினும் - எவ்வளவு பல ஆன லும், துற்று அவிழ் ஒவ்வா - உணவாகிய சோற்றை ஒப்பாக மாட்டா; துணிவு - இதுவே உறுதி; என்னும் ஆறே என்பதைப் புலப்படுத்தும் வழி இது."

உண்ட பின்னர் ஈரக் கையை இலக்கருகில் வைத்து எழும் செயலுக்குச் கவிஞர் தற்குறிப்பேற்றமாக இந்தப் பொருளேக் கற்பனை செய்து சொல்லியிருக்கலாம்.

எதுவானலும் அந்தப் பழக்கம் நினைவுக்கு வரா விட்டால், இந்தப் பாட்டுக்குரிய பொருளைத் தெரிந்து கொண்டிருக்க இயலாது.

துற்றன ஆகத் தொகுத்து விரல் வைத்தது எற்றுக்குஅஃது என்னின்,-இது அதன் காரணம்: அற்றம் இல் தானம் எனப்பல ஆயினும் துற்றவிழ் ஒவ்வா, துணிவுஎன்னும் ஆறே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/97&oldid=619711" இலிருந்து மீள்விக்கப்பட்டது