பக்கம்:முல்லை மணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதினளே சீதை

இந்த நாட்டில் வழங்கும் நாடோடிப் பாடல்கள் பல. சிறிய சிறிய பாடல்களும் நீண்ட பாடல்களும் இருக்கின் றன. பெரிய பெரிய கதைப் பாடல்களும் பல உண்டு. தேசிங்கு ராஜன் கதை, அல்லியரசாணி மாலே முதலியவை அந்த வகையைச் சேர்ந்தவை. இராமாயணம், பாரதம் சம் பந்தமான பல வரலாறுகளைப்பற்றிய நெடும் பாடல்கள் தமிழ் நாடோடி இலக்கிய உலகத்தில் வழங்கி வருகின்றன.

இராமாயணச் செய்தி இல்லாமல் இலக்கியமோ, பாட்டோ, பழமொழியோ இருப்பது அரிது. இராமா யணம் முழுவதையும் ஏற்றப் பாட்டாகவே பாடுவதுண்டு. தாலாட்டில் இராமாயணம் அமைந்திருக்கிறது. இவற்றை யன்றிச் சின்னஞ் சிறிய பாடல்களில் ராமரும் சீதையும் வருகிருர்கள்.

கும்பகோணமே கோணம்-அந்தக் குறவர் போட்டதே சோளம் ராமர் விட்டதே பாணம்-அது எங்கே போச்சுதோ காணம்

என்று, குழந்தைகள் பாடும் பாட்டிலே இராமாயணம் வருகிறது. -

கழல்பாட்டு ஒன்றில் இராமர் போகிற தேசத்தைப் பற்றிய பேச்சு வருகிறது:

ஓர் இராமன் போற தேசம் என்னென்ன தேசம் கல்இல்லாத் தேசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/98&oldid=619712" இலிருந்து மீள்விக்கப்பட்டது