பக்கம்:முல்லை மணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிஞளே சீதை 93

கறடில்லாத் தேசம் முள்ளில்லாத் தேசம் முடக்குவெட்டி ராஜா, இதே போலவே மற்ருெரு விளையாட்டுப் பாட்டில் சிதாதேவி வருகிருள்:

நான்குத் தோங்கு பம்பரம் நாங்களாடும் பம்பரம் சீதா தேவி பம்பரம், ஏழைப்பெண் என்கிற ஜானகி எங்கள் பெண் என்கிற ஜானகி மாட்டுப்பெண் என்கிற ஜானகி மகராஜி. விளையாட்டுப் பாடலிலே இராவணன் கூட வருகிருன். அவன் இல்லாவிட்டால் இராமாயணமே இல்லையே! பலிஞ்சடுகுடு விளையாட்டுப் பாட்டு ஒன்றில் இராவணன் வருகிருன்; அதோடு குண்டுகூட வருகிறது! விளேயாட்டுக் கும் சரித்திரத்துக்கும் சம்பந்தம் இல்லே! பட்டா பட்டா ராவணு பறங்கிப் பட்டா ராவணு நெத்தியிலே குண்டுபோட்டுச் சுட்டாண்டா ராவன: வேறு ஒரு பாட்டில் இராவணனும் சரவணனும் வரு கிரு.ர்கள். இரண்டு பெயர்களின் முடிவிலும் ஒலி ஒற்றுமை இருப்பதுதான் அவர்கள் சேர்வதற்குக் காரணம்!

முக்கோட்டு ராவணு

முத்துச் சரவணு. இது கல்லாங்காய் விளையாட்டில் மூன்று கல்லே வைக் கும்பொழுது சொல்லும் பாட்டு.

ஏற்றப்பாட்டில் இராமாயணச் செய்திகள் பல இடை யிடையே வரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/99&oldid=619713" இலிருந்து மீள்விக்கப்பட்டது