பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முல்லைப்பாட்டு

வைந்துனைப் பகழி மூழ்கவின் செவிசாய்த்து உண்ணாது உயங்கும்மா சிந்தித்தும்,

ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன் விரல் தகைதாழ் கண்ணி நல்வலம் திருத்தி அரசிருந்து பணிக்கும் முர சுமுழங்கு பாசறை இன்துயில் வதியுதன்'. :67-801

மேற்கொண்டுவந்த வினை முடிவுற்றதும் தன்னை, எதிர் நோக்கிக் காத்திருக்கும் மனைவியால் விரைந்து சேல்லாது, வெற்றிக்குத் துணைநின்ற தன் தாம்படைக்கு நேர்ந்த நலிவு , நெஞ்சை வருத்த . அவற்றைக் கண்டு, அவற்றின் துயர் தணிக்கும் பணியில் அருவம் வந்த பின்னரும் சிறிது காலம் பாசறைக் கண்ணே தங்கிவிடுவது உண்டு என்பது, நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன், பாண்டி மாதேவி தன் தலைநகரத்து அரண்மனைக்கண், தன்னை எதிர் நோக்கிக் காத்திருக்கவும், பாசறைக்கண் பகைவர் யானைப்படையை வெற்றி கொண்ட போரில், புண் பெற்று வீழ்ந்து கிடக்கும் தன் படைவீரர்களைக் கானும் பெருநோக்கில், நள்ளிரவு அதிலும் மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவு என்றும் பாராமல் ஒரு சிலர் துணையோடு, காட்டுப் பாசறைக்கண், வீரர்கள் வீழ்த்து கிடக்கும் இடந்தோறும் சென்று திரிந்த நிலையை விளக்கும் நெடுநல் வாடைத் தொடர்களாலும் உறுதியாதல் அறிக.

  • மின்னவிர்

ஒடையொடு பொலிந்த வினை நவில்யானை,

நீள் திரள் தடக்கை நிலமிசைப் புரளக்

களிறு கடம் படுத்த பெருஞ்செய் ஆடவர்