பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் I $

தனக்கு வெற்றி தேடித்தர, தனக்குப் பெருமை சேர்க்க, களத்தில் உயிர் ஈந்த களிறுகள், குதிரைகள், அவற்றின் மீதமர்ந்து போரிட்ட வீரர்கள், விழுப்புண் பெற்று வீழ்ந்து துன்புற்றுக் கிடக்கும் அவற்றின் நிலை ஆகிய இவையே, அவன் மனத் திரையில் மாறிமாறிக் காட்சி அளித்துக் கொண்டிருந்தன. அந் நினைவு அலைகளின் முன், காதலி நினைவு, நிழலாடவும் இயல்வில்லை. களிறுகளை எண்ணுகிறான். குதிரைகளை எண்ணு கிறான். வீரர்களை எண்ணுகிறான். போரில் அவை ஆற்றிய அரும் பணி; அப்பணியாற்றுங்கால், அவை பெற்ற: இழப்பும் இன்னலும், அதற்கு ஈடாகத் தான்் செய்ய வேண்டிய நன்றிக்கடன் ஆகிய இந் நினைவுகளிலேயே ஆழ்ந்து ஆழ்ந்து அயற்சி மிகவே, சிற்றே கண்ணுறக்கமும் கொண்டுவிட்டான்.

வெற்றி கிட்டிவிட்டது; இனி இவ் வீரர்களைப் பற்றிக் கவலை இல்லை; விரைந்து வீடடைந்து மனைவியைக் காண்போம்; மகிழ்ச்சியில் ஆழ்வோம் என எண்ணி விடாது, காதவி கண்ணிர் சிந்தியவாறே காத்துக் கிடப்பினும் கவலை இல்லை; வெற்றிக்குத் துணை நின்ற நாற்படையின் நலம் காணலே நம் தலையாய பணியாகட்டும் என எண்ணிச் செயல்படும் அரசனின் சிறப்பு பாராட்டற்குரியது. - - -

தாம் படைக்க விரும்பிய பேரரசனை அத்துணைப் பண்பாளனாகப் படைத்துக் காட்டியுள்ளார் புலவர்

நப்பூதனார் :

மண்டமர் நசையொடு கண்படை பெறா அது எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து. பிடிக்கணம் மறந்த வேழம் ; வேழத்துப் பாம்பு பதைப்பு அன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்திச் சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு