பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன்

அவன் மேற்கொண்டு வந்தவினை, முடிந்துவிட்டது. பகையரசரை வெற்றி கொண்டாயிற்று. அவர்களும், திறை கொடுத்து, அவன் தலைமையைப் பணிந்து ஏற்றுக்கொண்டுவிட்டனர். கடமை முடிந்த நிலையில், அக்கடமையுணர்வால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காதல் உணர்வு கொழுந்துவிட்டுப் பெருகியிருக்க வேண்டும். கிழவி நிலையே வினையிடத்துரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்' என்பது தொல்காப்பியம். மேலும் வினை முடிந்து, வருவதாக வாக்குறுதி அளித்து வந்த, கார்கால வரவை அறிவூட்டும் புது மழையும் பெய்து ஒய்ந்துவிட்டது. அந்நிலையில் அவ்விளையவேந்தன் உள்ளத்தில் துடித்து տ էք வேண்டியது, மனையகத்தே விட்டு வந்திருக்கும் மனைவியின் நினைவு. ஆனால் அது நிகழவில்லை. காதலி நினைவு, அவனுக்கு வரவில்லை : காரணம் நயத்தக்க நாகரீக நெறி நிற்பவன் அவன். 'சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே'. 'அறிவினான் ஆவது உண்டோ: பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை' என்பனபோலும் ஆன்றோர் உரைகளை உள்ளத்தில் ஏற்றிருப்பவன்.

வெற்றி வாய்த்துவிட்டதும் உண்மை. பகைத்து நின்ற பகையரசரெல்லாம் பணிந்து திறை கொடுத்து விட்டதும் உண்மை ; வெற்றித் திருமகள் அவனை மணங் கொண்டு விட்டதும் உண்மை. ஆனால், அந் நிலை, எளிதில் கிடைத்துவிடவில்லை. இழப்பு இல்லாமலும் அது கிடைத்துவிடவில்லை. பல உயிர் களைப் பலி கொடுத்த பின்னரே, அது வாய்த்துள்ளது.