பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாநலம் 1 լ

போரில் பெற்ற வெற்றியால் களிப்புற்றிருப்பதற்கு மாறாக, அவ்வெற்றிக்குக் காரணமாய் அமைந்த நாற்படைக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி எண்ணி, வருந்தும் நல் உள்ளம் படைத்த, அரசிளங்குமரன் வீழ்ந்துகிடக்கும் பள்ளி அறைக்கண் கொண்டு நிறுத்து கிறார். அடுத்தகணமே, அத்தகை யானைக் கணவனாகப் பெற்ற பெருமைக்குரிய அவ்வினையோள் மனத்துயர் மறக்க இசையின் பத்தில் ஆழ்ந்து கிடக்கும் அவள் பள்ளி அறைக் குக் கொண்டு செல்கிறார். ஆங்குச் சிறிதுபோதே இருக்கச் செய்துவிட்டு, மீண்டும் காட்டுப் பாசறைக்குக் கொண்டு செல்கிறார். ஆங்கு மனை நோக்கிப் புறப் பட்டுவிட்ட நாற்படை செலவைக் காட்டுகிறார். படை செல்லும் காடும், ஆங்கு மலர்ந்து மகிழ்வூட்டும் மலர்க்காட்சி, பிணையோடு ஆடி மகிழும் கலை மான் கூட்டம் வானம், வாய்க்க வளர்ந்து வளங்கொழித்துக் கிடக்கும் வரகுக் கொல்லைகள், அவன் ஊர்ந்துசெல்லும் நெடிய வலிய தேர், அதில் பூட்டிய குதிரைகள், ஆகிய வகைகளைக் காட்டிக்கொண்டே வருவதன் மூலம் , வழிநடைவருத்தம் தோன்றாவாறு அழைத்து வந்தவர். இறுதியாக, மனைக்கண் உள்ளாள் மனம் மகிழ, அவள் காதுகளில் தம் வருகை அறிவிக்கும் ஒலி விழுமாறு: கனைத்துக் குரல் எழுப்பியவாறே, குதிரைகள் சென்று. நிற்கும் அவள் மனை முன்றிற்கண் கொண்டு நிறுத்து கிறார். நிற்கும் நம் காதுகளிலும் குதிரைகளின் கனைப்பொலி விழவே, நாம் இதுகாறும் கண்டுவந்தது. ஓர் இன்பப் படக்காட்சி என்ற உணர்வை ஊட்டி, நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி மெய்மறக்கச் செய்து உள்ளார் புலவர். - - .