பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () முல்லைப்பாட்டு

நிலையில் விரைந்து வீடடைதல் அவன் கடன் அன்றோ? அது அவன்பால் உளதா ? என வினாவுவார்க்கு விடை அளிப்பார் போன்று, அடுத்து அவன் மீட்சியைக் கூறத் தொடங்கி அவன்வரும் காட்டின் வனப்பு, ஆங்குவாழ் மாவினம் காதலிற்களித்து உலாவும் இன்பக்காட்சி. அவற்றைக்காணும் அவன் உள்ளம், காதலியைக் காணத் துடிக்கும் என்பதறிந்து, இயல்பாகவே விரைந்து ஓடும் குதிரைகளை மேலும் விரைந்து ஒட்டும் தேர்ப்பாகன், அவன் குறிப்பறிந்து விரைந்து ஒடி மனை முற்றத்தே நின்று, நம்பணி முடிந்துவிட்டது என்ற மனநிறைவைக் காட்டிலும், நீ காணத்துடிக்கும் உன் கணவனை உன்பால் கொண்டு சேர்த்துவிட்டேன் என்பதை உரைக்கும் ஆர்வமிகுதியால், கனைத்து ஆரவாரிக்கும் தேர்க்குதிரைகள் ஆகியவற்றைக் கூறிமுடித்துள்ள முறை, மிகமிகப் பாராட்டிற்குரியது.

இக் காட்சிகளைக் காட்ட, புலவர் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறார். கார்மேகம் நீர் குடிக்கச் செல்லும் கடலுக்கும், அது உலகையே வளைத்துக் கொள்வதுபோல் விரைந்து எழுந்து படியும் மலைமுகடுகளுக்கும், அது பெருமழையாக மாறிக் கொட்டியதால், வெள்ளம் பாயும் முல்லைக்காட்டு நிலத் திற்கும், அந்நிலத்துப் பேரூரின் புறநகர்க்கண் உள்ள ஆயர்பாடியில், ஆனிரைத் தொழுவத்திற்கும், அந்நாட்டு அரசன் பெருங்கோயிற்கண், கலக்க மிகுதியால் கண்ணிர் சொரிந்து கிடப்பாள் ஒர் இளம் பெண்ணின் பள்ளி யறைக்கும், ஒரு பெருநாட்டின் இயற்கை அரணாக அமைந்திருக்கும் காவற்காட்டில் செயற்கை அரணாக இலைக்கூரைவேய்ந்து கட்டப்பட்டிருக்கும் காட்டுப் பாசறைக்கும், அப்பாசறைக்குள் நாற்படை வீரர்களின் குடியிருப்பு, களிறுகள் காவல்காத்து நிற்கும் நாற்சந்தி, நாழிகைக்கணக்கர், மெய்க்காப்பாளர் போல் வார் பணி புரிந்து தன்னைச்சூழ்ந்திருக்க, அரசன் இருக்கும் தனி அறை, ஆகியவற்றை நிரலே காட்டி வந்து, இறுதியில்