பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாநலம் 9

ஆயர்களின் செல்வமாக மதிக்கப்படும் ஆனிரைக் கன்றுகள் பால் அவள் காட்டும் அன்பு, ஆகியவற்றைக் கூறி, அது கேட்பவர் உளத்தில், கன்றின் துயர் இது, அக்கன்றின்பால் ஆய்மகள் காட்டும் அன்பு இது வாயின், ஆயர்குல ஆடவர் இயல்பு யாதோ? கன்றின்ற காராவின் இயல்பு யாதோ? என்ற வேட்கை எழும் என்பதறிந்து, அடுத்து அவற்றைக் கூறி, அடுத்து, நற்சொல் கேட்ட பெரு முது பெண்டிர், மனை புகுந்து தாம் கேட்டுவந்த விரிச்சியின் நலம் கூறி, அவன் விரைவில் வந்து சேர்வன் எனக்கூறும் ஆறுதல் உரைசுறி, அவர் கூறுவ எதுவும் காதில் புகமாட்டா அளவு, கணவனைக் காணாக் கடுந் துயரில் கண்ணிர் சுரந்தது வீழ்ந்து கிடக்கும் இளையோள் இயல்புகூறி, அடுத்து அது கேட்டவர் உள்ளத்தில், இத்துணை இளையோளை இத் துணை அழகுடை யோளை இத்துணைப் பேரன்பினாளை, இவ்வாறு வருந்த விடுத்துச் சென்றிருப்பவனின் இயல்பு யாதாக இருக்கும்? இவளையும் மறத்துபோக அவன், ஆங்கு மேற்கொண்டிருக்கும் பணிதான்் யாதாக இருக்கும்? என்ற கேள்விகள் எழும் என்பதறிந்து, அவன் இயல்பு கூறத்தொடங்கி, முதற்கண், அவன் ஆங்கு அமைத் திருக்கும் பாசறையின் அமைப்பு நலம்கூறி, அடுத்து ஆங்கு வெற்றிக்குத் துணைநின்ற வீரர்களுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி வருந்தியும், இழப்பு நேர்ந்தாலும் எடுத்து வந்ததி வினை இனிதே முடிவுற்றது என்ற மகிழ்ச்சியால் சிறிதே கண் உறங்கியும் கிடக்கும் அவன் நிலையைக் கூறி, அதிலும் இக்காட்சிகள், மனையகத்தே வீழ்ந்து கிடப்பவள் மனத் திரையில் புலப்படும் வண்ணம் விளங்கக் கூறி, அடுத்து அம்மனக்காட்சிதரும் மனநிறை வால், தன்துயரை ஒருவாறு தாங்கி இருப்பதே, அறமாம் என உணர்ந்து, அது மறக்க இசையில் சிந்தனையைப் போக்கிக் கிடக்கும் அவ்விளையோள் நிலையை, மறுபடியும் கூறி, அடுத்து ஆற்றியிருப்பது தனக்கு அறம் என்பதை இவள் உணர்ந்தாள் என்றால் வினை முடிந்த