பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாநலம்

காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், முல்லைப்பாட்டை நவில்தொறும் நயம் பயக் கும் வகையில் பாடியுள்ளார்.

ஒரு நூலை இயற்றப்புகும் புலவன், நூலின் தொடக்கத்தில், தான்் பழிபடு கடவுளையாத ல், நூலுக்கு ஏற்புடைக் கடவுளை யாதல் வாழ்த்தி வணங்குதல் மரபு என்பதையொட்டி, முதல் மூன்று வசிகளில், தாம்பாட எடுத்துக் கொண்ட முல்லைத் திணைக்குரிய கடவுளாம் திருமாவின் திருவுருவை, அதிலும், தாம் பாடும் முல்லைப் பாட்டு அடியளவால் குறுகியதேனும், பொருள் விளக்கத்தில் வானினும் உயர்ந்தது எ ன் ப ைத உரையாமல் உரைக்கும் வகையில், தொடக்கத்தில் வாமனனாம் குறள் உருவில் தோன்றி, இறுதியில் ஈரடியால் உலகை அளக்கவல்ல நெடிதுருவமாய் உயர்ந்த திருமால் வடிவைக்கூறி, அதை அடுத்து முல்லை நிலத்தை வாழவைக்கும் கார்ப்பருவ மழைவரவையும், அது பெய்யும் மாலைப்பொழுதையும் கூறி, கார்காலமும், அக்காலத்து மாலைப்பொழுதும் வரக்கண்டு அந்தோ ; மகளின் கணவன் வருவதாகக்கூறிச்சென்ற கார்காலத்து மாலை வந்து விட்டதே. அவள் கணவன் வந்திலனே: இவள் நிலை என்னாம் ?' என்ற கவலை மிக, மகள் வருத்தத்தைப் போக்க வல்ல மாமருந்தாம் அவன் வருகை, எப்போது நிகழும் ? இவள் நோய் எப்போது தீரும் என்பதை அறியத் துடிக்கும் பெரு முதிர் பெண்டிரையும், அவர்கள் அது அறிந்து கொள்வான் வேண்டி, விரிச்சி கேட்க, ஊர்ப்புறம் நோக்கி விரை வதையும் கூறி, அடுத்து, ஆங்கு அவர் கேட்ட நற்சொல் இதுவெனக்கூறுவதன் முன்னர், அது கூறிய ஆய்மகள்