பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி

அவள் அரச மாதேவி. அவள் கணவன் ஒரு பேரரசன். பெரு நாடு ஆள்வதால் மட்டுமன்று : தன்னோடு பகைத்து நிற்பார் நாடுகளைத் தட்டாது தனதாக்கிக்கொள்ளும் பேராற்றல் &2. Hú) f-li. SI SITFT யிருந்தும், தன்னோடு நட்பு பூண்டிருப்பார் நாட்டின் மீது, நாட்டம்கொள்ளாக் கொற்றத்தாலும் பெரியவன்; தன் வெற்றிக்குத் துணை நிற்கும் நாற்படையின் நலம் காக்கும் பண்பாலும் பெரியவன். கணவனும் மனைவியும் உணர் வாலும் , உயர் பேரொழுக்க நெறிகளாலும் ஒத் த நிலையினராதல் வேண்டும் என்ற ஆன்றோர் மதிப்பீட்டிற்கு ஒப்ப, கணவன்பால் அமைந் திருந்த அப்பண்புநலங்களை அவளும் அப்படியே கொண்டிருந்தாள். -

கணவனைப் பிரிந்து கணப்பொழுதும் வாழ மாட்டாப் பேரன் புடையவள் : கணவனோடிருந்து இன்பம் துய்க்க வேண்டிய இளமைப் பருவத்த ள். அங்ங்னமாகவும், கணவன் பகைநாடு கொள்ளப் போகிறேன் விடை தா' எனக் கூறிய போது வினையே ஆடவர்க்கு உயிர்' என்ற உலகியல் உண்மையை உணர்ந்து, காதலன் அருகில் இன்மையால், தன்னைக் கடுந்துயர் வருத்தும் என்பதை உணர்ந்தும், அவனைப் போக விடுவதே பேரறம் என்ற, உயர்ந்த உள்ளம் உடைய வளாகி அவனைப் போகவிட்ட பெருமனைக் கிழத்தி அவள்.

வினை முடித்து வருவதாக, அவன் குறித்துச் சென்ற காலம் வந்த தும், அவன் வாராமை கண்டு அற்றொனாத் துயர் உற்றவள். அவளுக்கு உணவும்

ர்வும், உயர் பேரொழுக்கமும் ஊட்டி வளர்த்த