பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்சி 17

செவிலியர் போலும்,பெரு முது பெண்டிர், அடுக்கடுக்கான காரணங்களை எடுத்துக்கூறி, சென்ற கணவன் விரைவில் வந்து சேர்வன்' என உறுதி கூறிய போதும், அவர் கூற்றில் சிறு கூறுதான்ும் செவியுள் புகமாட்டா அளவு, கணவன் பால் சென்றுவிட்ட காதற் கருத் துடையவள் அவள்;

அந்நிலையில், அவள் கண்கள் கலங்கி முத்து முத்தாகக் கண்ணிர் உதிர்க்கலாயின. ஆனால் அந் நிலையை அவள் நீட்டிக்கவிடவில்லை. அதை நீள விடுவது ஊரும் உறவும் 'இவள் இவ்வாறு வருந்திக் கிடக்கவும், அவன் வந்திலனே' எனக், கணவனைப் பழிக்க வழிவகுத்துவிடுமே! அவன் புகழ் வளர, வளர்ந்த அவன் புகழைக் காக்க வேண்டியதான், அதுசெய்யாது அவனைப் பழிப்பதற்குத் துணையாகிவிடுவதா என எண்ணினாள். அவ்வளவே, அவள் அகத்தில் மட்டு மல்லாமல் அவள் புறச் செய்கைகளிலும் மாறுதல் நிகழ்ந்து விட்டது. அகத் துயரை மறைக்க முனைந்தாள். ஆனால் உள்ளத் துயர் காரணத்தால் மெலிந்துவிட்ட அவள் உடல் உறுப்புக்கள், அத்துயரைப் பலரும்காணப் பறை சாற்றுவது கண்டாள். அதனால் அதை மறைக்க எண்ணினாள். மெலிந்த உடல் பண்டே போல் பருத்து விடுவது எண்ணிய உடனே நடந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்தாள். அதனால், உடல் மெவிவைக், காண்பவர்க் ஒல்லாம் காட்டிக் கொடுக்கும் வகையில், முன் ன் கயளவும் இறங்கி ஒலமிடும் கைவளைகளை, முழங்கை அளவுக்கு ஏற்றிக் கைமெலிந்து வளைகழன்று விடவில்லை பாருங்கள்; அவை இறுகச் செறிக்கப் பட்டுள்ளன எனக் கூறாமல் கூற முனைந்தாள். ஆனால் அவள் செயல் அதுவாயினும், அவள் நினைவெல்லாம், கணவனையே பற்றியதாக, கவலை மிகவே செய்தது: அது, அவள் உடல் நலனைக் கெடுக்க, அவள் உடல் உறுப்புகளில் இறுகச் செறிக்கப்பட்டிருந்த அணிகள் ஒவ்வொன்றாக்க் கழன்று. உகலாயின. அதைக்

மு 2