பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冠8 முல்லைப்பாட்டு

கண்டாள். நினைவு, அவனையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் வரை, தன் அகத்துயரைப் பிறர் அறியாவாறு மறைத்து வைப்பது இயலாது. ஆகவே, நினைவை, வேறு ஒன்றில் மூழ்கடித் திடவேண்டும் எனத் துணிந்தாள். நினைவை வேறு ஒன்றில் போகவிடாது ஈர்த்துத், தன் பாலே வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றது, ஏழிசை ஒன்றே என உணர்ந்தாள். அதனால், தன் நெஞ்சை, இசையில் இரண்டறக் கலக்கத் துணிந்தாள். இசை அறிந்தவள் அவள். குழல் யாழ் போலும் கருவிகள் மட்டுமே இசை எழுப்ப வல்லன, என்பது இசையறியாதார் கூற்று. உண்மையான உயர்ந்த இசை ஞானம் பெற்றவர், இயற்கை எழுப்பும் ஒவ்வொரு ஒலியிலும் இசை கேட்டு இன்புறுவர். அத்தகைய இசை ஞானம் உடையவள் அவள். அதனால், அவள் காதுகள் அவள் மாளிகையில் மலையருவிபோல் ஒரு பால் ஓயாது கொட்டிக் கொண்டிருக்கும் பெரு நீர் எழுப்பும் ஒலியில் ஏழிசை எழக்கேட்டு, அந்த இன் பத்தில் தன்னை மறந்து இருக்க முயன்றாள். காதல் துயரையும் மறந்து போகுமளவு இசை வெள்ளத்தில் ஆழ்ந்து போகும் ஏழிசை வல்ல பி அவள்.

இசையால் ஈர்ப்புண்டு அவள் உள்ளமும், உடலும், உணர்விழந்து வீழ்ந்து கிடந்தாலும், காதலன் நினைவு அறவே மறைந்து போய்விடவில்லை. அவள் காதல் உணர்வு அத்துணை வலுவுடையது. அவள் மனத் தகத்தே ஒரு மூலையில் அது கனன்று கொண்டேதான்் இருந்தது. அதனால் உள்ளம் உருக்கும் இசை மழையில் நனைந்து உணர்விழந்திருக்கும் அந்நிலையில் அவள் காதலன் ஊர்ந்து வந்த தேரைக், காற்றென ஈர்த்துக் கொணர்ந்து அவள் மனைவாயிலில் நிறுத்திய குதிரைகள் எழுப்பிய கனைப்பொலி, அவள் காதுகளுள் கடிதின் நுழைந்து, அவளைக் கனவுலகிலிருந்து நினைவுலகிற்குக் கொண்டு வந்து விட்டது. குதிரையின் கனைப்பொலியில் இசை இன்பம் காண இயலாது என்றாலும், அது அவள்