பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முல்லைப்பாட்டு

புலவர், ஒரு பேரரசுக்குத் துணை நிற்கும் குடிமக்கள் பலரின், நலம் பாராட்டவும் தவறவில்லை.

நீர்நிலைகளின் கரைக்கண், தம் முக்கோல்களை நாட்டி, அதன் மீது அழுக்கு போகத் துவைத்துக் கொண்ட, தம் காவி ஆடைகளை விரித்து உலர்த்திவிட்டு, அதன் அருகேயிருந்து தவம் மேற்கொள்ளும் பார்ப்பனத் துறவிகளைக் 'கல் தோய்த் து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை காட்டியுள்ளார்.

மேய்புலத்தில் பசும் புல் மேய்ந்து, வயிறு நிரம்பிய ஆனிரைகளை, மாலை வந்துற்றதும், தத்தம் மனை களுக்கு விரைந்து கொண்டு சேர்ப்பான் வேண்டி, தம் கைக்கோல்களால் அடித்துத் துரத்திச் செல்லும் கோவலர்களைக் 'கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த் தர இன்னே வரு குவ’ காட்டியுள்ளார்:

அழகிய சிறந்த வேலைப்பாடும், அழிக்கலாகா உறுதிப்பாடும் உடையதாகிக் களத்தில் அரும் பணி ஆற்றிய நெடிய பெரிய தேரில் வீற்றிருக்கும் தன் அரசனை. அவனைக் காணத் துடிக்கும் கருத்தோடு, மனைக்கண் காத்துக் கிடக்கும், அரசமாதேவிபால் விரைவில் கொண்டு சேர் க்கும் கருத்தோடு, இயல்பாகவே விரைந்து செல்லும் குதிரைகளை விரைந்து ஒட்டிக்

கொண்டு சேர்க்கும் தேர்ப்பாகனைத் 'துணை பரிதுரக்கும் செலவினர் வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே'. காட்டியுள்ளார்.

மண் ஆன சமிக்குப் படைகொண்டு வந்தான்ை வென்று துரத்தும் விழுமிய நோக்கோடு, அணிந்து சொண்ட தேன் சொட்டும் வஞ்சி மலர்களால் ஆன தலை மாலைக் குப் பெருமைசேர்க்கும் வகையில் போராடி, வேந்தனுக்கு வெற்றியைத் தேடித்தந்து செஞ்சோற்றுக் கடன் கழித்துவிட்டு, அப்போரில் தம் இன்னுயிர் இழந்து, இறவாப் புகழ்பெற்ற வீரர்களைக் . வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத்