பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 முல்லைப்பாட்டு

படையுடன், காலம் காட்டும் கருவியாம் குறுநீர்க் கன்னலோடு சென்று, இரவு பகல் எப்போதும் ஒவ்வொரு நாழிகையினையும், குறுநீர்க் கன்னல் துணையோடு சிறிதும் பிழையாமல் உணர்ந்து, அரசனுக்கு உணர்த்தி நிற்கும், நாழிகைக் கணக்கரை பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள், தொழுது காண்கையர், தோன்ற வாழ்த்தி, எறிநீர் வையகம் வெலி இய. செல்வோய் ! நின் குறி நீர்க்கன்னல் இளைத்து என்று இசைப்ப'. காட்டியுள்ளார்.

குதிரைகளை அடித்துத் துரத்த உதவும் சவுக்கை, இடையில் வளைத்துக் கட்டிக்கொண்டு அதன்மேல், பாலாடை போலும் ஆடையை இறுகக் கட்டி, மேனியில் கவசம் போலும் சட்டை அணிந்து, காண அஞ்சும் காட்சியும், உரம் வாய்ந்த உடல் அமைப்பும் உடைய வராய், அரசன் பாடிக்கொண்டிருக்கும் காட்டுப் பாசறைக்கண், அரசன் உறையும் அறையைப் புலிச்சங்கிலி தொங்க லால், அக அறையும், புற அறையும் உடையுவாகத் தம் கைத்திறம் காட்டிக்கிடக்கும் யவனர்களைக் 'மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறியுடை, மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை, வண்கண் யவனர் புலித் தொடர்விட்ட புனை மான் நல்இல், திருமணி விளக்கம் காட்டித் திண்ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளி’’. காட்டி யுள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட ஐம்பெரும் குழுவினருடன், அரசன் இருந்து அரசியல் முடிவுகாணும் அக அறைக்கண், ஆங்கு நிகழ்வன்வற்றைப் புறம் சென்று உரைக்க வல்லாரைப் பணியாளராகக் கொள்ளுதல், முறையாகாது என்பதால். வேற்று மொழி ஒன்றே தெரிந்தவரும், உள்ளத்து உணர்வுகளை உரைக்க விரும்பினும் உரைக்க இயலா ஊமைத் தன்மையாம் உறுப்புக் குறையுடைய வருமாய் ஆங்கு நியமிக்கப்பட்டுப் பணிபுரிந்து கிடக்கும்