பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முல்லைப்பாட்டு

தன் கொல்லைப்புறத்துக் கொட்டிலில் சிறு தாம்பு கொண்டு கட்டப்பட்டிருக்கும் இளங்கன்றுகள், மாலைப் பொழுது ஆகியும் மனை திரும்பாத் தம் தாய்ப் பசுக்களை நினைந்து அம்மா : அம்மா ! என அழைத்து அலறும் குரல் கேட்ட அக்கணமே, கார்காலத்துப் பெரு மழை பெய்து ஒய்ந்த மாலைக்காலத்துக் குளிரின் கொடுமையையும் பெயருட்படுத்தாமல், தன் இரு கைகளும் கொண்டு தன் இரு தோள்களையும் இறுகப் பற்றிக்கொண்டே, வீட்டின் புறம்போந்து கொட்டிலை அடைந்து கன்றுகளின் அருகே அமர்ந்து, அவற்ம்ை அன்பொழுகத் தழுவிக் கொடுத்துக்கொண்டே ஆயர் கோல் கொண்டு அடித்துத் துரத்த, உம் தாய்மார் இப்போதே வந்துவிடுவர் ; வருந்தாதீர்' என்பன போலும் இன்னுரை வழங்கும் இனிய, இளைய ஆய்ம களையும்,

'சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் ஒடுங்கு சுவல் அகைத்த கையள், கைய கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த் தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி’’. காட்டியுள்ளார்:

முன்கையில் தொடி மின்ன, புறமுதுகில் கூந்தல் துவள வளர்த்த வளமான குடியில் பிறந்தும், பாசறைக் கண் பணிபுரியும் விருப்பம் மிக் குவந்து, பணிபுரிவது காட்டுப் பாசறை என்பதால், தன்மார்பு ஆடைக் குள்ளே, பாதுகாப்பாகக் கூரிய வாள் ஒன்றையும் மறைத்து வைத்துக்கொண்டு, கையில் எண்ணெய்ச் சுரையை ஏந்தியவாறே, பாசறைக்கண், அரசன் இருக்கும் அகவறைக்கண் ஏற்றப்பட்டிருக்கும் பாவை விளக்குகள், எண்ணெய் இல்லாமையாலோ பெருங் கா ற் று வீசுவதாலோ அணைந்து போகுந்தோறும் எரிப்பான்