பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய புலவன்

இத்துணைச் சிறப்பு அமைய, முல்லைப்பாட்டைப் பாடி அளித்த புலவர். கந்தரத்தனார், செங்கண்ணனார், காரிக்கண்ணனார் போலும் புலவர்கள் வாழ்ந்த காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தவர் அறுவை வாணிகன் இளவேட்டனார், கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். பண்டவாணிகன் .ெ வ ண் ணா க னா ர் போலவே, வணிகர் குலத்தில் வந்தவர். அவர் தந்தை மேற்கொண்டிருந்தது பொன் வாணிகம். காவிரிப்பூம் பட்டினத்தில் நாற்சந்தியில் இடங்கொண்டு, மனத்தது. மாசு ஆக மாண்டாரின் நீராடி மறைந்து ஒழுகுவார்' போலும், மாபாவிகளைக்கொன்று தின்று அறம் காக்கும் காவல் பூதத்தின் பெயரையே தம்முடைய பெயராகக் கொண்டவர்களில் தலைசிறந்து விளங்கிச் சிறப்பிக்கப் பெற்றவர், என்ற இச்சிறு வரலாற்றுக்குறிப்பைக் 'காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனாரி நப்பூதனார்’ என்ற தம் பெயர் மூலம் வெளிப்படுத்துவ தல்லது, தம்மைப் பற்றி விளம்பரப் படுத்திக்கொள்ளா விழுமிய பண்பாளர் நம்புலவர். இனி அவர் பாடிய முல்லைப்பாட்டினுள் நுழைவோமாக,