பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9\_6).]60)Lf)

பாநலம்’ ’ எனக்கூறிவிட்டு, அப் பாவிற்குப் புலவர் சூட்டிவிட்டிருக்கும் அணிகள் பற்றிக் கூறாது போவது முறையாகாது. ஆகவே அவ்வணிகளில், தலைச் சூட்டு அணியாகத் திகழும் உவமை அணி பற்றி ஒரு சில :

செய்யுள் நடைக்கு அழகு செய்யும் பல்வேறு அணிகளில் உவமை அணி சிறப்புடையது. பொன் வணிகர் மகனார் நப்பூதனார், தாம் இயற்றிய முல்லைப் பாட்டு, நூற்றிமூன்று அடிகளையே கொண்ட சிறிய பாஆகவும், அதில் உவமை அணிகளை மிகப் பெரிய அளவில் ஆண்டுள்ளார். எடுத்துக் காட்டுக்கு ஒருசில.

கார் முகிலும் கார் வண்ணத் திருமாலும்

ஒலி ஒயாப் பெருங்கடலில் நீர் உண்டு கறுத்து, கொண்டல் கொண்டலாக மேலே எழுந்து, வானளாவ உயர்ந்து நிற்கும் மலை முகடுகளில் படிந்து, கண்ணொளி கெடுக்க மின்னி, காது செவிடுபட இடித்துப் பெருமழை பொழியும் கார் மேகத்திற்கு, மாவலி மூன்று அடி நிலம்தர ஒப்புக்கொண்டு வார்த்த நீர், கைகளினின்றும் வீழ்ந்து கொண்டே இருக்க, ஒலிக்கும் சங்கும், ஒளி வீசும் சக்கரமும் ஏந்தி, வானளாவ உயர்ந்த நெடிய உருவம் கொண்ட கார்வண்ணத் திருமாலின் நெடிய உருவம் உவமை காட்டியிருப்பது அம்மம்ம அழகு அழகு !

'நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்,

பாடிமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு