பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & முல்லைப்பாட்டு

கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும் பெயல் பொழிந்த'. 6 - وسسه ،

காவியாடை தாங்கிய முக்கோலும், அம்பறாத்தூணி தாங்கிய

வில்லும்.

பாசறைக்கண், வில் வீரர்கள், தம்முடைய விற்படைகளை வரிசைவரிசையாக நாட்டி, அவற்றின் மீதே அம்பறாத் துணிகளை மாட்டிவைத்திருக்கும் காட்சிக்குப் பார்ப்பனத் தவசிகள், தம் ళ} శ్రీ முக்கோல்களை நாட்டி, அவற்றின் மீதே அழுக்குப்போகத் துவைத்துக் கொண்டதம் காவியாடைகளை ஈரம் புலரப் போர்த்திவைத் திருக்கும் காட்சியை உவமை யாக்கியிருக்கும் நயம், உணர்ந்து மகிழ்தற்கு உரியது.

'கல் தோய்ந்து உடுத்த படிவப் பார்ப்பான்

முக்கோல் அசைநிலை கடுப்ப, நற்போர் ஒடாவல்வில் துரணி நாற்றி" — 36-38.

புதரும் மூதாளரும் வெண் துகிலால் ஆன தலைப்பாகையும், மெய்ச் சட்டையும் அணிந்து கொண்ட மெய்காப்பாளர், தம் ஆண்டு முதிர்ச்சியால் தளர் நடையிட்டு உலாவரும் காட்சிக்குத், தூய வெண்ணிற மலர்களையே கொண்ட மோசி மல்லிகைக் கொடி படர்ந்த காட்டுச் சிறுதுாறுகள் காற்றில் அசைந்தாடும் காட்சியை, உவமை காட்டி இருப்பது நனி மிகு கவின் சிறப்புடையது.

"அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்

சிதர்வரல் அசைவளிக்கு அசைவந்தாங்குத் துகில் முடித்துப் போர்த்த துாங்கல் ஒங்கு நடைப் பெருமூதாளர் ஏமம் சூழ’’ . — 51-54.

جمن مخبیسمج جسنتیبیستمیسمسمتماعی