பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்காலத்து மாலை மழை

ஆவணியும் புரட்டாசியும் கார்காலம் என்ப. கார் காலத்துப் பகலில் காயும் ஞாயிற்றின் கதிர்ச்சூடு மாலையிலும் இரவிலும் பெய்யும் மழைத் தாரைகள், மண்மேடுகளைக் கரைத் து ஒடச் செய்து விடும்ப். பொன்னை உருக்கிவிடும் என்பதால், அக்காலத் துப் பருவநிலை குறித்து, பொன் உருகக் காய்ந்து மண் உருகப் பெய்யும்' என்ற பழமொழியும் வழங்குகிறது.

கடல் நீரை வேண்டுமளவு குடித்துவிட்டமையால் கார்மேனித் திருமால் போல் கறுத்த மேகம், உலகையே வளைத்துக் கொள்வதுபோல் வானவீதியில் படர்ந்து, திருமால்கைச் சக்கராயுதம் ஒளிகாலுவதேபோல், கண்ணொளிகெடுக்க மின்னி, அவன் கைச்சங்கு முழங்கினாற்போல் காது செவிடுபட இடித்து, மலை. முகடு நோக்கி எழுந்து, அத்திருமால் ஆனிரை காத்து அளித்தாற்போல் உலகத்து உயிர்கள் எல்லாம் வாழப், பெரு மழை பெய்யும் காட்சியைக் காணும், முல்லை நிலத்து மக்களின் மனக்கண் முன், அவர்கள் வழிபடும், அந்நிலத்துத் தெய்வமாம் திருமாலின் நெடிய உருவமும், கொடியோரை அழிக்க, சங்கு சக்கரங்களை ஏந்தினும், ஆனிரை ஒம்பும் அருள்வந்த பெரிய கைகளும், மூன்றடிமண் அளிக்க ஒப்புக்கொண்டு, அதை உறுதி செய்ய மாவலி மன்னவன், கையில் நீர்வார்த்த அளவே, உலகைத் தம் ஈரடியால் வளைத்துக் கொள்ள, வானளாவ: நிமிர்ந்து எழுந்த நெடிய உருவமும் தோன்றவே தம்மை மறந்து போவர். r

தம்மை மறந்து நிற்கும் முல்லை நிலத்து மக்கள், காயும் ஞாயிற்றின் வெப்பமிகுதியால் உற்ற நீர் வேட்கை தணிய, நீர் பருகி அமர்ந்ததும், உண்ட நீரெல்லாம், உடலெங்கும் வியர்வையாக வெளிப்பட்டுத் துளிப்பது போல், கார்காலத்துக் கதிரவனின் வெப்பம் தாங்க