பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்காலத்து மாலை மழை 3 1

கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலல் எழிலி, பெரும் பெயல் பொழிந்த சிறுபுன்மாலை" (1.6)

நனந்தலை உலகம் - அகன்ற நிலப் பரப்பை உடைய உலகத்தை. வளைஇ வளைத்துக் .ெ கா ன் டு, நேமியோடு வலம்புரி பொறித்த - சக்கரத்தோடு வலம் புரிச் சங்கையும் ஏந்திய மாதாங்கு தடக்கை - ஆனிரை காக்கும் பெருமை மிக்க கைகளில். நீர்செல - மாவலி வார்த்த நீர் வழிய. நிமிர்ந்த - வானளாவ உயர்ந்த. மா அல் போல-திருமாலைப் போல. பாடிமிழ் பணிக்கடல் பருகி-ஓயாது ஒலி எழும், குளிர்ந்த கடலில் நீர் குடித்து. வலன் ஏர்பு-வலமாக எழுந்து. கோடுகொண்டு எழுந்த: மலை உச்சியைக் குறியாகக் கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிவி. விரைந்து செல்லும் மேகம். பெரும்பெயல் பொழிந்த-பெரிய மழையைப் பெய்த சிறுபுன்மாலை . சிறுமையும், தனித்து இருந்தோரை வருத்தும் புன் மையும் வாய்ந்த மாலைக் காலத்தில்,

நேமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை' என்ற தொடரை, நேமியொடு வலம்புரி தாங்கு தடக்கை எனக் கொண்டுகூட்டி, சக்கரத் தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகள்' என்றும், 'மாபொறித்த' என்ற தொடரை அடுத்த வரியில் வரும் 'மா அல்" என்பதற்கு முன்னே நிறுத்தி, 'திருமார் பிடத்தே, திருமகளை வைத்த மால்' என்றும் பொருள் கூறியுள்ளார் நச்சினார்க்கினியர்.

அத்தொடரைக் கிடந்தாங்கே கொண்டு, சக்கர ரேகையும், வலம்புரிச் சங்கு ரேகையும் பொறிக்கப் பெற்ற கைகள் : திருமகளை அணைத்த கைகள்' என்று பொருள் கொண்டுள்ளார் பிறிதோர் உரையாசிரியர்.

திருமாவின் கைகளில் சங்கு சக்கர ரேகைகள் உள்ளன எனக் கூறும் மரபும், அவை பாடும் பாக்களும் உளவேனும், திருமாலின் நெடி துருவம், பெரும்பெயல்