பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முல்லைப்பாட்டு

பெய்யும் கார்முகிலுக்கு உவமையாகக் கொள்ளப் பட்டு இருக்கும் சூழ்நிலையில், இடிக்கும், மின்னலுக்கும் ஏற்ப, முழங்கும் சங்கு, ஒளி வீசும்: சக்கரம் ஏந்திய கைகளைக் கொள்வதே பொருந்துமாதலின், சங்கு, சக்கர ரேகைகள் பொறித்த கைகள் எனக் கொள்வது ஈண்டு பொருந்தும் பொருளாகாது. இக் கருத்தை

ஆழி மழைக் கண்ணா! ஒன்றும் நீ கைகரவேல் ஆழி புற் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியம் தோளுடைப் பத்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம் புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை’’

என்ற ஆண்டாள் திருப்பாவையில் வரும், 'பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம் புரிபோல் நின்று அதிர்ந்து’’ என்ற வரிகள் உறுதி செய்வது காண்க:

அதேபோல், உயிர் ஒம்பும் மழைத் தொழிலுக்கு உவமையாக, ஆனிரை ஒம்பும் திருமால் செயல் கூறுவதே பொருந்தும் ஆதலாலும், திரு மால், திருமகளை மார்பில் கொண்டிருப்பதாகக் கூறுவதுதான்் மரபே ஒழிய, கைகளில் தாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுவது மரபு அன்று ஆதலாலும், நீர் உண்டு நிமிர்ந்த கார் முகிலுக்குத், திருமகள் தழுவாத் திருமாலின் கார் வண்ணத் தனித் திருமே ணிதான்் பொருந்தும் உவமை ஆகும் ஆதலாலும், திருமகளை மார்பில் வைத்த திரு மால் என்றோ, திரு மகளைத் தாங்கிய கைகளை உடைய திருமால் , என்றோ கொள்வதும் பொருந்தும் பொருளாகாது.

கற் சொல் கேட்கும் மகளிர்

அத்தகைய முல்லை நிலத்துப் பேரூர் ஒன்று: காவற் காடும், அகழியும் மதிலும் வளைத்து அரண் செய்யப்