பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்சொல் கேட்கும் மகளிர் 33

பெற்றது. பல்லாண்டுகளுக்கு முன்பே உருவான பழமைச் சிறப்பு வாய்ந்தது. அப்பேரூரின் புறநகர்ப் பகுதியில், அம் மாலைக் காலத்தில், ஆண்டாலும், அன்பு, அருள், அறம் அறிவுடைமையாலும் பெரியவர்களான மகளிர் சிலர், இனி நடக்க இருப்பதை அறியும் வேட்கை மிக்கவராய், நாழியில் கொண்டு வந்த நெல்லையும், மலர்ப்பிடாவில் கொண்டுவந்த, வண்டுகள் வந்து மொய்க்க அரும்பவிழ்ந்து மலர்ந்து மனம் நாறும் புத்தம் புது மலர்களையும், வழிபடு தெய்வங்களுக்குத் து.ாவி, அத்தெய்வ அருள் வாக்கை எதிர் நோக்கி இருந்தனர்.

'அருங்கடி மூதூர் மருங்கில் போகி

யாழிசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழிகொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி து உய்க், கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி சிற்ப -- (7–11)

(அருங்கடி முதுார் மருங்கில் போகி-அரிய காவலை உடைய பழைய பேரூரின் புறநகர்க்குச் சென்று; நாழி கொண்ட நெல்லொடு - நாழியில் கொண்டு சென்ற நெல்லுடன் ; யாழிசை இன வண்டு - யாழ் இசைபோல் இனிமையாக ரீங்காரம் செய்யும் நல்ல இனத்தைச் சேர்ந்த வண்டுகள். ஆர்ப்ப - மொய்த்து ஒலிக்கும்படி : அரும்பு அவிழ் - அரும்புகள் மலரும் ; நறுவி - முல்லை அவரி; து உய் - நறு மண ம் நாறும் மலராகிய முல்லை மலர்களைத் துாவி கைதொழுது கை கூப்பி வணங்கி : பெருமுது பெண்டிர்-பெருமைக்கு உரிய மூத்த, மகளிர் விரிச்சி நிற்ப-நற்சொல் கேட்டு நிற்க, - விரிச்சி எனப்படும் நற்சொல் கேட்கும் வழக்கம்: படை வீரர்க்கே உரியது எனப் பிறழ உணர்ந்து கொண்ட காரணத்தால், நச்சினார்க்கினியர், 18-ஆம்

மு.-3