பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器垒 முல்லைப்பாட்டு

அடிக்கண் வரும் 'நல்லோர்' என்னும் சொல்லை,

7 ஆம் அடிக்கண் வரும் 'போகி' என்னும் சொல்லின்

முன் இணைத்துப் படைத்தலைவர் ஏவலால் நற்சொல்

கோடற்குரியார் போய்' எனப் பொருந்தாப்பொருள் கூறியுள்ளார்.

இறை வழிபடுவார், நெல்லும் மலரும் தூவி வழிபடுவது வழக்கம் என்பதை, 'நெல்லும் மலரும் து உய்த் தொழுது (நெடுநல்வாடை : 43) முல்லை நிகர் மலர் நெல்லொடு து உய் (சிலம்பு : 9. 1-2) நெல் நீர் எறிந்து விரிச்சி ஒர்க்கும். (புறநானூறு : 280 : 6-7) என்ற தொடர்களும் உறுதி செய்வது காண்க.

பேரூர்மகளிர் ஊர்ப்புறத்தே உள்ள தெய்வங்களைச் சென்றுவழிபடும் வழக்காறு உடையவர் என்பதை, மாதரி முதுார்ப்புறத்தே கோயில் கொண்டிருக்கும் பூங்கண் இயக்கியைப் பால்மடை கொடுத்து வழிபட்ட நிகழ்ச்சியைக்கூறும், 'புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர் வோள் ஆயர் முதுமகள் மாதரி என்ற சிலப்பதிகாரத் தொடரும் (சிலம்பு : 1.5 16-18) உறுதி செய்வது காண்க -

பெருமுது பெண்டிர் கேட்ட நற்சொல்

அம்மகளிர் விரிச்சிக் கேட்டு நின்ற இடத்திற்கு அணித்தாக ஓர் இடையர் வீடு. மகளிர் மலர்தூவி நின்றபோது, இளங்கன்று ஒன்றின் 'அம்ம்ா! அம்மா !” என்ற, துயர் கலந்த ஒலி ஒயாது ஒலிக்கக் கேட்டு, வீட்டுக்கு உரியவள் வெளியே வந்தாள். மாலையில் பெய்த மழை விளைவித்த குளிரின் கொடுமை தாங்காது, இரு தோள்களையும் இரு கைகளாலும் மாற்றி அனைத்துக் கொண்டிருந்தாள். வந்தவள். குரல் எழுப்பித் தாயை அழைக்கும் கன்று கட்டியிருந்த